Published : 12 Jul 2015 11:35 AM
Last Updated : 12 Jul 2015 11:35 AM

வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தபால்தலை: மதுரையில் மத்திய அமைச்சர் உறுதி

முதல் விடுதலை வீரர் அழகு முத்துக்கோன் நினைவு தபால் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

அழகுமுத்துக்கோன் 256-வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. மதுரை யாதவா தன்னுரிமை பணியகத்தில் வைக்கப்பட்டிருந்த அழகுமுத்துக்கோன் வரலாற்று ஓவியங்களை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் மதுரை யாதவா கல்லூரியில் உள்ள அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தமிழ்நாடு யாதவா மகாசபைத் தலைவர் கோபாலகிருஷ்ண யாதவ், மற்றும் யாதவா தன்னுரிமை பணியக நிர்வாகிகள், யாதவா சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய அமைச்சர், வீரன் அழகுமுத்துக்கோன் நினைவு தபால்தலை வெளியிட விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

காமராஜர் விழாவில் அமித்ஷா

முன்னதாக மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு சம்பந் தப்பட்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பதிலளித்து வரு கின்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுவது போல் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டியதில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய காலஅவகாசம் உள்ளது. திமுக வும், காங்கிரஸும் கொள்கை, லட்சியம் இல்லாத சந்தர்ப்பவாத கட்சிகள். இக்கட்சிகள் கூட்டணி அமைக்க நெருங்கி வருவதில் ஆச்சரியமில்லை. காமராஜர் பிறந்த நாள் விழாவை பாஜக கொண்டாடக் கூடாது எனக் கூற தமிழக காங் கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எந்தத் தகுதியும் இல்லை. தேசியத்துக்காக உழைத்த வர்களை பாஜக மதிக்கிறது.

மதுரையில் வரும் 15-ம் தேதி பாஜக சார்பில் நடத்தப்படும் காமராஜர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க அமித்ஷா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மதுரை- ராமேசுவரம் இடையே நான்குவழிச் சாலையாக மாற்றும் திட்டத்துக்கு மதுரையில் அடிக்க ல் நாட்டும் விழா ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்கிறார் என்றார் அமைச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x