Published : 13 Aug 2019 03:43 PM
Last Updated : 13 Aug 2019 03:43 PM
திருச்செந்தூர் அருகே அமலி நகரில் புதிதாக கட்டப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் 4 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் தரத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகரில் அரசு நிதியுதவி பெறும் ஆர்.சி தொடக்கப்பள்ளி இயங்கிருகிறது.
கடந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 140-க்கும் மேற்றபட்ட மாணவர்கள் பயின்றுவருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் கட்டிடத்திலுள்ள மூன்றாம் வகுப்பின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அக்ஸன் , ஜெயம், ஆண்ட்ரூ, மற்றும் மெர்சிராணி ஆகிய நான்கு பேரின் தலையில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து காயமடைந்த மாணவர்கள் மீட்கப்பட்டு திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளியில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த தகவலைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்களை அழைத்துச் சென்றனர். பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்த தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பள்ளிக்கு வந்து பள்ளியின் தரத்தை ஆய்வு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
விபத்தினை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்டு விபத்துக்குள்ளா பள்ளிக் கட்டிடத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT