Published : 13 Aug 2019 06:50 AM
Last Updated : 13 Aug 2019 06:50 AM
அத்திவரதர் தரிசனம் வரும் 16-ம் தேதி நிறைவு பெற்றவுடன் ஆகம விதிப் படி உரிய பூஜைகள் செய்யப்பட்டு வரும் ஆகஸ்டு 17-ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படுவார் என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன் னையா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் 3 இடங்களில் பக்தர்களை தங்க வைக்க பந்தல்களை அமைத்துள்ளோம். கீழ்கதிர் பூர் பி.ஏ.வி. பள்ளிக்கு அருகே அமைக்கப் பட்டுள்ள பந்தலில் பக்தர்கள் இரவில் தூங்கி எழுந்து செல்லும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவர் களுக்கு உணவு வழங்கவும், குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகளை செய்துள் ளோம். அங்கு கட்டுப்பாட்டு அறை களும் திறக்கப்பட்டுள்ளன. கோயிலில் கூட்டம் குறைந்ததும் அங்கிருப்பவர்கள் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்படுவர். இதேபோல் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கீழ்கதிர்பூரிலேயே மற்றொரு இடம் என 3 இடங்களில் இதுபோன்ற தங்கும் விடுதிகள் அமைக் கப்படுகின்றன. இங்கு கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
80 லட்சம் பேர் தரிசனம்
ஆகஸ்டு 15-ம் தேதியுடன் முக்கிய பிரமுகர்கள் தரிசனமும், ஆகஸ்டு 16-ம் தேதியுடன் பொது தரிசனமும் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு உரிய ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் வரும் ஆகஸ்டு 17-ம் தேதி அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறார்.
கடந்த 41 நாட்களில் அத்தி வரதரை சுமார் 80 லட்சம் பக்தர்கள் தரிசித் துள்ளனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர்.பக்தர்கள் தரிசனத்துக்குச் செல்ல ஏற்கெனவே 45 மினி பேருந்து கள் இயக்கப்படுகின்றன. கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.
கோயில் உண்டியலில் இதுவரை ரூ.5 கோடிக்கு மேல் காணிக்கைகள் வந்துள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் விட்டுச் சென்ற செருப்புகள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக் கப்படும். அவை போக மீதமுள்ள செருப்புகள் ஏலம் விடப்படும் என்றார்.
இந்த சந்திப்பின்போது கண்காணிப் புக் குழு அலுவலர்களாக நியமிக்கப் பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் பாஸ்கர், தோட்டக்கலை துறை இயக்குநர் சுப்பையா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment