Published : 10 Jul 2015 08:41 AM
Last Updated : 10 Jul 2015 08:41 AM

தமிழ்நாட்டில் முதல் முறையாக காசநோய் சிகிச்சையை கண்காணிக்க புதிய மென்பொருள் வேலூரில் அறிமுகம்

தமிழ்நாட்டில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் காசநோயா ளிகள் மாத்திரை உட்கொள்வதை கண்காணிக்க புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது.

காசநோயால் பாதிக்கப்பட்ட வர்கள் 6 முதல் 8 மாதம் வரை கூட்டு மருந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்தக் காலகட்டத்தில் நோயாளி கள் தினமும் மருந்து உட்கொண் டால் மட்டும் நோய் குணமாகும். எனவே, கூட்டு மருந்து சிகிச்சை யில் மருந்து உட்கொள்ள நோயாளி கள் தினமும் அருகில் உள்ள மருத் துவமனைக்கு செல்ல வேண்டும்.

இந்நிலையில், காசநோய்க்கான கூட்டு மருந்தை நோயாளிகள் உட்கொள்வதை கண்காணிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய மென்பொருளை உருவாக்கியுள் ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் நேற்று இந்த மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கட்டணம் இல்லாத தொலைபேசி எண்கள் அடங்கிய மருந்து பாக்கெட்களை மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் நகுல் குப்தா, மார்டின் ஆகியோர் வேலூர் மாவட்ட துணை இயக்குநர் (காசநோய்) ராஜா சிவானந்தத்திடம் வழங்கினர்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘புதிய மென்பொருள் உதவியுடன் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு தினமும் உட்கொள்ள மருந்து மாத்திரை வழங்கப்படும். தினமும் ஒரு மாத்திரை பிரிக்கும்போது, அந்த கவரில் கட்டணம் இல்லாத தொலைபேசி எண் இருக்கும். மாத்திரை சாப்பிட்டதும் அந்த தொலைபேசி எண்ணுக்கு நோயாளி மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் உரு வாக்கிய மென்பொருளில் குறிப் பிட்ட நோயாளியின் பெயரில் மாத்திரை சாப்பிட்டதற்கான பச்சை குறியீடு தோன்றும். மாத்திரை சாப்பிடாதவர்கள் சிவப்பு குறியீட்டு டன் காணப்படும்.

தினமும் நோயாளிகள் மாத்திரை சாப்பிட்டாரா என்பதை மாவட்ட காசநோய் அலுவலகத்தில் உள்ள கணினியில் பார்க்கலாம். மாத்திரை சாப்பிடாத நோயாளிகள் அடையா ளம் காணப்பட்டு, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள களப் பணியாள ருக்கு தெரிவிக்கப்படும். அவர் நோயாளியை அணுகி மாத்திரை சாப்பிட அறிவுரை வழங்குவார்.

இதன்மூலம் நோயாளிகள் தொடர்ந்து மருந்து சாப்பிடுவது சுலபமாக கண்காணிக்க முடியும். தமிழ்நாட்டில் முதல் முறையாக இது வேலூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் எச்ஐவி நோய் தொற் றுள்ள நோயாளிகளுக்கு கட்டணம் இல்லாத தொலைபேசி எண் அச்சிடப்பட்ட கூட்டு மருந்து வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x