Published : 29 Jul 2015 10:37 AM
Last Updated : 29 Jul 2015 10:37 AM

எனது மாணவர் கலாம்: கல்லூரி பேராசிரியர் பெருமிதம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 18-ம் தேதி திண்டுக்கல், மதுரை, கரூர் மாவட்டங்களுக்கு வந்து சென்றார். அதுவே அவரின் கடைசி தமிழக சுற்றுப்பயணமாக அமைந்துவிட்டது.

இந்த சுற்றுப் பயணத் திட்டத்தில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள அவரது கல்லூரிப் பேராசிரியரை சந்திக்கும் நிகழ்ச்சி இடம் பெறவில்லை. கடைசி நேரத்தில் கலாம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் ஓய்வுபெற்ற இயற்பியல் பேராசிரியர் முனைவர் சின்னத்துரையை திண்டுக்கல்லில் சந்தித்தார். 1952-ம் ஆண்டு பிஎஸ்சி இயற்பியல் படித்தபோது இவரிடம் மாணவராக இருந்துள்ளார். தன்னை சந்தித்த 10 நாளில் தனது மாணவர் கலாம் மரணமடைந்த தகவலை கேட்ட பேராசிரியர் சின்னத்துரை மிகுந்த கவலையடைந்தார். நேற்று கலாம் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தி கண்ணீர்விட்டார். கலாம், தன்னை சந்தித்தபோது தனக்கு வழங்கிய இரண்டு புத்தகங்களை, அவரது உருவப் படத்துக்கு முன் வைத்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார்.

கலாம் மறைவு குறித்து, அவரது பேராசிரியர் சின்னத்துரை கூறும்போது, ‘எளிய குடும்பத்தில் பிறந்து, நாட்டின் உயர்ந்த பதவிக்கு சென்று, இன்று நாடே போற்றும் கலாமுக்கு ஆசிரியராக இருந்தது நான் செய்த பாக்கியம். இன்னும் அவர் இருந்து நாட்டுக்கு சேவை செய்திருக்கலாம்…’ என்றவருக்கு, அதற்குமேல் பேச முடியாமல் நா தழுதழுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x