Last Updated : 07 Aug, 2019 04:34 PM

 

Published : 07 Aug 2019 04:34 PM
Last Updated : 07 Aug 2019 04:34 PM

தூத்துக்குடி கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 1 டன் எடை கொண்ட புள்ளி திமிங்கல சுறா 

தூத்துக்குடி வேம்பார் கடற்கரையில் இன்று (புதன்கிழமை) புள்ளி திமிங்கல சுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

4.5 மீட்டர் நீளமும் சுமார் 1 டன் எடையும் கொண்ட இந்த சுறா நோய்வாய்ப்பட்டு இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பிரம்மாண்டமாகக் காட்சியளித்த இந்த சுறாவைக் காண அருகாமைவாசிகள் குவிந்தனர்.

கரை ஒதுங்கிய சுறாவை வனத்துறையினர் மீட்னர். பின்னர் வனச்சரக அலுவலர் ரகுவரன் முன்னிலையில் சூரங்குடி கால்நடை மருத்துவர் கௌரிசங்கர் மூலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. உடற்கூறு ஆய்வின்போது வன அலுவலர் அருண்குமார், வனக்கப்பாளர்கள் ராஜ்குமார், பாரதி மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் இருந்தனர்.

உடற்கூறு ஆய்வின் அடிப்படையில் இதன் வயது சுமார் 6 இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வகை புள்ளி திமிங்கல சுறா உலகிலேயே மிகப் பெரிய உயிரினம் ஆகும்.

உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் அதே கடற்கரையில் ஜெசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி ஆசிட் மற்றும் சுண்ணாம்பு பவுடர் போட்டு புதைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x