Published : 17 Jul 2015 08:43 AM
Last Updated : 17 Jul 2015 08:43 AM

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி

செங்குன்றம் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலும், வெளிப்பகுதியிலும் நிறைந்துள்ள ஆக்கிரமிப்புகளால், நாள் தோறும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக அப்பகுதி மக்கள் ‘தி இந்து’ உங்கள் குரலில் புகார் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிக் குப்பம் பேரூராட்சியில் (செங்குன்றம்) நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அமைந் துள்ளன. இதனால், இங்குள்ள பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

பேருந்து நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் காணப்படும் ஆக்கிரமிப்புகளால் நாள்தோறும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆண்டுக்கணக்கில் தீர்வே இல்லாமல் தொடரும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ‘தி இந்து-உங்கள் குரல்’ எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கூறியதாவது: பாடிய நல்லூர், புள்ளிலைன், தீர்த்தகிரையம் பட்டு, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பல்வேறு இடங்களுக்கு செல்ல செங்குன்றம் பேருந்து நிலையத்தையே பயன்படுத்து கின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர பகுதிகளான நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இவ்வழியாக சென்று வருகின்றன. எனினும், செங்குன்றம் பேருந்து நிலையத்தின் உள்ளே இருக்கும் 30-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் மோட்டார் சைக்கிள்களால், இப்பகுதி எந்நேரமும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிறது. பேருந்து நிலையத்தின் முன்புறமும் சிறுகடைகளால் ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனால் நெருக்கடி ஏற்பட்டு பேருந்து ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.

பேருந்து நிலையத்தின் வெளியே ஜி.என்.டி. சாலையின் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடை கள், ஆட்டோக்கள், லாரிகள், வேன்கள் வரிசை கட்டி சாலையை ஆக்கிரமிக் கின்றன. இதனால் நாள்தோறும் அவதியடைவதாக அவர்கள் கூறினர்.

இதுகுறித்து விசாரித்தபோது, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகத் தரப்பில், “செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்னும் ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x