Published : 05 Aug 2019 07:34 AM
Last Updated : 05 Aug 2019 07:34 AM
சென்னை
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிப்பதோடு, விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் நாடுமுழு வதும் மொத்தம் 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி யில் தண்டவாளங்களை புதுப்பிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
ரயில்வே துறை சார்பில், நாடு முழுவதும் 1 லட்சத்து 16 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தண்டவாளங் கள் அமைக்கப்பட்டுள்ளன. தின மும் இயக்கப்படும் 12 ஆயிரம் பயணிகள் ரயில்களில் ஏறத்தாழ 2 கோடியே 30 லட்சம் பேர் பய ணம் செய்கின்றனர். ரயில்வே துறையை மேலும் மேம்படுத்தி, பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க தனியார் பங் களிப்புடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பழைய ரயில் தண்ட வாளங்களை புதுப்பிப்பதில் தீவி ரம் காட்டவில்லை. ஆண்டுதோறும் 2,000 முதல் 2,500 கி.மீ. தொலைவு வரை மட்டுமே புதுப்பிக்கப்படு கின்றன. நாடுமுழுவதும் 10,000 கி.மீ. தொலைவுக்கு ரயில் தண்ட வாளங்கள் புதுப்பிக்கப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியன் ரயில்வேயில் சொகுசு ரயில் பெட்டிகள், நவீன இன்ஜின் கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப் படுகின்றன. இதற்கு ஏற்றாற்போல் ரயில்களின் வேகம் 130 கி.மீ. வரை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், இப் போதுள்ள வளைவான தண்ட வாளங்களில் அதிவேக ரயில்களை இயக்குவது பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், 2019-20-ம் நிதி ஆண்டில் 4 ஆயிரம் கி.மீ. தொலை வுக்கு தண்டவாளங்கள் புதுப்பிக் கப்படவுள்ளன. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.10,120 கோடி ஒதுக் கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 21 ரயில்வே பாதைகள் செயல் இழந்த பாதைகளாக இருப்பதாக கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இதில் 9 பாதைகள் தற்போது புதுப்பிக்கப் படவுள்ளன. தமிழகத்தில் உள்ள வாலாஜா ரோடு - ராணிப்பேட்டை பாதையும் இதில் அடங்கும்.
இதுதொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறும்போது, ‘‘ரயில்வே துறையில் படிப்படியாக நவீனமயமாக்கல் நடந்து வருகின் றன. பெரும்பாலான இடங்களில் இரட்டைவழிப் பாதைகள் அமைக் கப்பட்டு வருகின்றன. அதேபோல், முக்கிய நகரங்களை இணைக்கும் தடங்களில் தண்டவாளங்களைப் புதுப்பிப்பது அவசியம் என பல் வேறு கோட்ட அதிகாரிகளும் ரயில்வே அமைச்சகத்திடம் வலி யுறுத்தினர். அதிவிரைவு ரயில் களை இயக்க ரயில் பெட்டிகள், இன்ஜின்கள் தயாராகவுள்ளன. ஆனால், தண்டவாளத்தின் தரம் போதுமானதாக இல்லை. எனவே, தண்டவாளங்கள் புதுப்பிப்பு பணி கள் தற்போது வேகமெடுத்துள்ளன. அந்த வகையில், தண்டவாளம் புதுப்பிப்புக்கு மட்டுமே ரூ.10 ஆயி ரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந் தவுடன் தேர்வு செய்யப்படும் தடங்களில் மணிக்கு 130 கி.மீ.வேகத்தில் அதிவிரைவு ரயில்களை இயக்க முடியும்’’ என்றனர்.
டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறும் போது, ‘‘ரயில்வேயில் புதிய பாதை கள் அமைக்கவும், புதுப்பிக்கவும் தேவைப்படும் தண்டவாளங்களை பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (செயில்) நிறுவனத்துடன் 2003-ம் ஆண்டு வாரியம்செய்து கொண்ட ஒப்பந்தம் அடிப்படையில் வாங்கி வருகிறது. இந்நிறுவனம் 2016-17-ம் நிதி ஆண்டில் 6,49,300 டன் தண்ட வாளங்கள் உற்பத்தி செய்தது. அதில் 6,20,000 டன் ரயில்வேக்கு வழங்கியது. அதேபோல 2017-18-ம் நிதி ஆண்டில் 9,02,700 டன் உற்பத்தியில் 8,74,000 டன்னும் 2018-19-ம் நிதி ஆண்டில் 9,85,000 டன் உற்பத்தியில் 9,45,000 டன்னும் வழங்கியது.
நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டில் 14.5 லட்சம் முதல் 15 லட்சம் டன் தண்டவாளங்கள் தேவைப்படுகின் றன. முதல் கட்டமாக வாங்கவுள்ள 4 லட்சத்து 45 ஆயிரத்து 219 டன் தண்டவாளங்களை செயில் நிறுவனத்திடம் வாங்காமல், உலக ளாவிய ஏல அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டு இருக் கிறது. இதுதவிர வாரியம் நேரடியாக 89,042 டன் தண்டவாளங்களை தனி யார் நிறுவனத்திடம் வாங்குகிறது.
தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் தண்டவாளங்கள் கொள்முதல் செய்வது அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும். எனவே, இதைத் தவிர்க்க, செயில் நிறுவனத்தின் உற்பத்தித் திறனை அதிகரித்து, மொத்த தண்டவாளங்களையும் அங்கேயே வாங்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT