Published : 03 Aug 2019 04:59 PM
Last Updated : 03 Aug 2019 04:59 PM
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கியிருக்கின்றன.
தென்காசி மாவட்ட சிறப்பு அதிகாரியாக அருள்சுந்தர் தயாளன் இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்றார். பின்னர் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் சிறப்பு அதிகாரி அருண் சுந்தர் தயாளன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாவட்டம் பிரிப்பது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 9-ந்தேதி 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. பிற்பகல் 3 மணிக்கு சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
இதுபோன்று 10-ம் தேதி குற்றாலம் பராசக்தி கல்லூரியில் காலை 11 மணி முதல் 1 மணி வரை கருத்து கேட்கப்படுகிறது. இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கலந்து கொள்கிறார்
தனி மாவட்டம் உருவாக்குவது தொடர்பான கருத்துகள், ஆட்சேபனைகள் இருந்தால் இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT