Published : 14 Jul 2015 09:02 AM
Last Updated : 14 Jul 2015 09:02 AM

அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி உண்ணாவிரதம்

அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யாததை கண்டித்து அங்கிருந்து வெளி யேற்றப்பட்டோரில் ஒருவரான ஹேமலதா சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினார்.

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத் தில் ஜார்க்கண்ட் பொகாரா பகுதியைச் சேர்ந்த ஹேமலதா பிரசாத், அவரது சகோதரிகள் ஜெயஸ்ரீ பிரசாத், அருணஸ்ரீ பிரசாத், ராஜ்யஸ்ரீ பிரசாத், நிவேதிதா பிரசாத் ஆகியோர் தங்கி இருந்தனர். கடந்த 2002-ம் ஆண்டு ஹேமலதா பிரசாத்தின் மீது ஆசிரம நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

மேலும் 5 சகோதரிகளும் சேர்ந்து ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதற் கிடையே உச்ச நீதிமன்றம் 5 சகோதரிகளும் ஆசிரமத்தை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் 5 சகோதரி களும் ஆசிரமத்தை விட்டு வெளி யேறாமல் இருந்தனர் இதை யடுத்து ஐந்து சகோதரிகளையும் ஆசிரம நிர்வாகம் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி போலீஸார் உதவியுடன் வெளியேற்றியது.

இதையடுத்து மறுநாள் இக்குடும்பத்தினர் காலாப்பட்டி லுள்ள கடலில் குதித்தனர். இதில் அருணஸ்ரீ (52), ராஜ்யஸ்ரீ (48) மற்றும் அவர்களுடைய தாய் சாந்தி தேவி (78) ஆகியோர் இறந்தனர். கடலில் தத்தளித்த நிவேதிதா, ஹேமலதா, ஜெயஸ்ரீ, பிரசாத் ஆகியோரை மீனவர்கள் மீட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை ஹேமலதா சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "ஆசிரம நிர்வாகிகள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு தந்து நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண் டும். ஆசிரமத்தில் மீண்டும் தங்க வைத்து எங்களுக்கு உணவு, உடை வசதிகளை செய்து தர வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கியுள்ளேன்.

புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசிடம் பலமுறை புகார் மனு தந்தும் நடவடிக்கை இல்லை. மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. மத்திய அரசும் ஆசிரம நிர்வாகி களுக்கு ஆதரவாக செயல் படுகிறது. யாருமே எங்க ளுக்கு உதவாததால் நான் இப்போராட்டத்தை தொடங்கியுள் ளேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x