Last Updated : 27 Jul, 2019 04:58 PM

 

Published : 27 Jul 2019 04:58 PM
Last Updated : 27 Jul 2019 04:58 PM

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். இங்கு ஆண்டுதோறும் ஆண்டாள் அவதாரித்த தினமான ஆடிப்பூர நாளைக் கொண்டாடும் விதமாக ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில், கோயில் தக்கார் ரவிச்சந்திரன், இணை ஆணையர் தனபால், செயல் அலுவலர் இளங்கோவன், ராம்கோ நிறுவனங்களின் தலைவர் வெங்கட்ராமராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து நேற்று இரவு 16 வண்டிச்சக்கரம் வீதி உலா நடைபெற்றது.

ஆடிப்பூரத் திருவிழாவின் 5-ம் நாளன்று கருட சேவை நடைபெறுகிறது. இதில் ரெங்கமன்னார், ஆண்டாள், பெரிய பெருமாள், பெரிய ஆழ்வார், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாசபெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

7-ம் நாள் திருவிழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் தெருவில் உள்ள கிருஷ்ணன்கோவிலில் ஆண்டாள்- ரங்கமன்னார் சயன சேவை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேரோட்டம் ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 8.05 மணிக்குத் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x