Published : 20 May 2014 01:23 PM
Last Updated : 20 May 2014 01:23 PM
மத்தியில் மக்கள் ஆதரவுடன் மலரும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மூலம் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை அடைவோம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வி.பாலன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை: புதுவை அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறை மாநிலக் கட்சியின் மகத்து வத்தை மக்கள் அங்கீகரித் துள்ளனர். முதன்முறையாக தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டு மக்களிடம் சென்றார் ரங்கசாமி. மக்கள் அவரை அரவணைத்து தங்கள் தோளில் சுமந்து ஆளும் கட்சியாக மாற்றிக் காட்டினார்கள்.
இரண்டாவது முறையாக புதுவையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை தடுத்து நிறுத்தியவரை எதிர்த்து மக்களிடம் நியாயம் கேட்டார். தடையாக இருந்த ஒருவரை அகற்றி விட்டு நல்லவரை தேர்வு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்த பின்பும், குறுகிய மனம் படைத்த சிலர் அதை ஏற்க மறுத்தனர். கூட்டணி தர்மத்துக்கு எதிராக வேலை செய் தனர். ஆனால் தோல்வியை தான் தழுவினர்.
மக்களவைத் தேர்தலில் தேசிய பிரச்சினைகளை தான் முன்னிறுத்த வேண்டும் என்பதை மறந்த காங்கிரஸ் கட்சியினர் மாநில பிரச்சினைகளை எடுத்துக் கொண்டனர். ஆனால் நாங்களோ யார் டெல்லியை ஆண்டால் புதுவைக்கு முன்னேற்றம் கிடைக் கும் என்பதை கூறி பிரச்சாரம் செய்தோம்.
முதல்வரின் நல்லெண்ணத் தையும், சேவை மனப்பான்மையை யும் கேலி செய்தனர். நிதி நெருக்கடி யால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லையே என முதல்வர் ஆதங்கத்தை வெளிப் படுத்தினாலும் அதை கிண்டல் செய்தனர். ஆனால் இதை உணர்ந்த மக்கள் தெளிவான தீர்ப்பை தந்து விட்டனர்.
மக்கள் பணிபுரியும் நல்லவர்களுக்கு இடையூறு செய்தால் பொறுக்க மாட்டோம் என கடந்த 2011 தேர்தலில் மக்கள் நிரூபித்தனர். ஆனால் எதிர்ப்பாளர்கள் பாடம் கற்கவில்லை. முதல்வரை செயல்ப டவிடாமல் தடுத்து, மக்களிடம் செல்வாக்கை குறைக்க நினைத்து செயல்பட்டனர்.
ஆனால் இத்தேர்தல் வெற்றி மூலம் முதல்வரின் மக்கள் சேவைக்கு உரிய அங்கீகாரத்தை மக்கள் அளித்துள்ளனர்.
மத்தியில் மக்கள் ஆதரவுடன் மலரும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மூலம் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து என்ற கோரிக்கையை அடைவோம் என்றார் பாலன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT