Published : 27 Jul 2019 07:59 AM
Last Updated : 27 Jul 2019 07:59 AM

தண்டவாள பராமரிப்பு பணியால் 3 விரைவு ரயில்கள் ரத்து

சென்னை

ஹவுரா - காரக்பூர் தடத்தில் தண்டவாள பணி நடக்கவுள்ளதால் 3 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

ஹவுரா - காரக்பூர் தடத்தில் தண்டவாள பணி நடக்கவுள்ள தால் சென்னை சென்ட்ரலில் (எம்ஜிஆர்) இருந்து ஹவுராவுக்கு 27-ம் தேதி (இன்று) புறப்பட வேண்டிய கோரமண்டல் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், ஹவுரா - திருச்சிராப்பள்ளி வாராந்திர விரைவு ரயிலின் நாளைய (28-ம் தேதி) சேவையும், ஹவுரா - சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர்) நாளைய ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

கூடுதல் பெட்டிகள்

ஹைதராபாத் - திருவனந்தபுரம் சபரி விரைவு ரயில்களில் (17230/17229) முன்பதிவு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி வரும் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் இணைத்து இயக்கப் படும்.

விஜயவாடா - சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர்) பினாகினி விரைவு ரயில்களில் (12711/12712) முன்பதிவு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நீக்கப்பட்டு, அதற்கு மாற்றாக ஒரு ஏசி பெட்டி வரும் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் இணைத்து இயக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x