Published : 26 Jul 2019 07:45 AM
Last Updated : 26 Jul 2019 07:45 AM

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் காலி: பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வலியுறுத்தல்

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங் களில் உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல், பொறுப்பு அதிகாரிகளை வைத்து பணிகள் மேற்கொள்ளப்படு கின்றன.

தமிழகத்தில் மாவட்டம்தோறும் உடற்கல்வி ஆய்வாளர் பணி யிடங்கள் உள்ளன. அந்தந்த மாவட்டங்களில் குறுவட்டம், கல்வி மாவட்டம், மண்டல அளவிலான போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்ற அணிகளை மாநில போட்டிக்கு அனுப்பி வைப்பது, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று உடற்கல்வி தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது, மாதத்துக்கு 5 பள்ளிகளை பார்வையிட்டு, பதிவேட்டில் கையெழுத்திடுவது, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு அணிகளை தேர்வு செய்து, தமிழகம் சார்பில் தேசிய போட்டிகளில் பங்கேற்க வைப்பது போன்ற பணிகளை உடற்கல்வி ஆய்வாளர்கள் மேற்கொள்வர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியிடங்கள், கடந்த 6 ஆண்டு களாக தமிழகத்தில் 32 மாவட்டங் களில் காலியாக உள்ளன. இவற் றுக்கு பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். உடற் கல்வி ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்படாததால், அதற் காக காத்திருப்பவர்களும் ஏமாற்ற மடைகின்றனர்.

பொறுப்பு ஆய்வாளர்

இதுகுறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில பொருளாளர் வெ.பெரியதுரை கூறியதாவது:

உடற்கல்வி ஆய்வாளர் பணி யிடங்கள் நிரப்பப்படாததால், பணி மூப்பு அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை - 1-ல் உள்ள ஒருவரை பொறுப்பு ஆய்வாளராக நியமித்துள்ளனர்.

முறைகேடுகள் நடக்க வாய்ப்பு

நடப்பு ஆண்டு குறுவட்டம், கல்வி மாவட்டம், மண்டல, மாநில போட்டிகள் நடத்தவும், வீரர்களை தேர்வு செய்யவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய் துள்ளது. இதை பொறுப்பு அதி காரிகள் நடத்துவதால், முறைகேடு கள், தவறுகள் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, உடற் கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதுவரை விளையாட்டு நுட்பம் அல்லது பணி மூப்பு கொண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் 10 பேரை கொண்ட குழுவை நியமித்து, அதன் மூலம் போட்டிகளை நடத்த ஏற் பாடு செய்யலாம். இதேபோல், மாணவர்களுக்கான பரிசுத் தொகை, நடுவர்களுக்கான மதிப் பூதியம் ஆகியவற்றை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தினால் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

மேலும், மாநிலம் முழுவதும் கண்காணிக்கக்கூடிய முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் பதவி உள்ளது. இதில், ஆண், பெண் இருபாலருக்கு தலா ஒருவர் பணியில் இருக்க வேண்டும். இதில், பெண்பாலருக்கான பதவி 4 ஆண்டு களாகவும், ஆண்பாலருக்கான பதவி 2 ஆண்டுகளாகவும் காலி யாக உள்ளன என்று தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநில பொருளாளர் வெ.பெரியதுரை கூறினார்.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. உடற்கல்வி இயக்குநர் நிலை-2-ல் வெறும் 86 இடங்கள்தான் மாநிலம் முழுவதும் உள்ளன. உடற்கல்வி ஆசிரியரில் இருந்து இயக்குநர் நிலை 2-க்கு பதவி உயர்வு பெற 22 ஆண்டுகள் ஆகின்றன. நிலை 1-க்கு 357 பணியிடங்கள் உள்ளன.

ஓராண்டில் பதவி உயர்வு

இதனால், நிலை 2-க்கு வந்த ஓராண்டில் பதவி உயர்வு பெற்று, நிலை 1-க்கு வந்துவிடலாம். எனவே, உடற்கல்வி இயக்குநர் நிலை 2-க்கான இடங்களை அதி கரிக்க வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ள னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x