Last Updated : 22 Jul, 2019 12:01 PM

 

Published : 22 Jul 2019 12:01 PM
Last Updated : 22 Jul 2019 12:01 PM

அத்திவரதரை மீண்டும் குளத்தில் புதைக்கக் கூடாது; முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டி

அத்திவரதரை மீண்டும் குளத்தில் புதைக்கக் கூடாது. இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் நேரில் சந்தித்து வலியுறுத்திப் பேசப்போகிறேன் என ஸ்ரீவில்லிபுத்தூர் மனவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர் தெரிவித்திருக்கிறார்.

விருதுநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர் , "அத்திவரதரை மீண்டும் குளத்தில் புதைக்கக்கூடாது. அவ்வாறு புதைத்தால் அது நல்லதல்ல. மீண்டும் பெருமாளை மூச்சுக்காற்றுகூட போகாத இடத்துக்குள் புதைப்பதற்கான அவசியம் இல்லை. கடந்த காலங்களில் சிலை திருடப்பட்டுவிடுமோ என  பயந்து  அத்திவரதர் உற்சவரை  புதைத்தனர். ஆனால்,  45 ஆண்டுகள் கழித்து வெளியில் எடுத்துள்ள அத்திவரதரை  தற்போது  மீண்டும்  புதைக்கத் தேவையில்லை. அத்திவரதர் நிறைய வரங்கள் தரக்கூடியவர். உலகத்திலிருக்கும் கஷ்டங்களைத் தீர்க்கவே அவர் வந்திருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை வைக்கப்போகிறோம். அனைத்து மடாதிபதிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியை நாங்கள் எடுத்து வருகிறோம். திருக்கோவிலூர் ஜீயர்கூட இதே கருத்தைத் தெரிவித்து கடிதம் கொதிருக்கிறார். அக்கடிதம் எங்களிடம் இருக்கிறது. இன்னும் நிறையபேர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 2,3 ஜீயர்களின் கடிதம் வந்திருக்கிறது" என்றார்.

நிருபர் ஒருவர் அத்திவரதர் வெளியே வந்ததால்தான் மழை பெய்யவில்லை எனக் கூறப்படுகிறதே என்று கேட்க, ”அத்திரவரதர் மேலே வந்ததால்தான் மழை பொழிகிறது. அவரை மீண்டும் புதைக்கக் கூடாது. அவர் இப்போது தனது புகழை தானே பரப்பிக் கொண்டிருகிறார். நல்லதே நடக்கும். அத்திவரதரை மீண்டும் பிரதிஷ்டை செய்ய அவசியமில்லை. சிலையை அங்கேயே வைத்து பூஜிக்கலாம். இதற்கான நடவடிக்கையை அரசு காஞ்சிபுரம் மடத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x