Published : 21 Jul 2015 08:03 AM
Last Updated : 21 Jul 2015 08:03 AM

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு ஆக.15 வரை விண்ணப்பிக்கலாம்: காலக்கெடு நீட்டிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வேண்டி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி களில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16-ம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற் கான புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் பள்ளிகளில் ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

அது தற்போது ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவல ரிடம் ஜூலை 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அது தற் போது ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 9 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் www.scholerships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x