Published : 19 Jul 2019 04:27 PM
Last Updated : 19 Jul 2019 04:27 PM
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக மதுரையில் தேசிய புலனாய்வு போலீஸ் இன்று (ஜூலை 19) விசாரணை மேற்கொண்டனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று பல்வேறு தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் நேற்று 4 பேர் சிக்கினர். இதில் ஒருவர் மதுரை நரிமேடு பகுதியில் ஏற்கனவே குடியிருந தது தெரியவந்தது. அவரைப் பற்றி விசாரிக்க திட்டமிட்ட தேசிய புலனாய்வு பிரிவு ( என்ஐ ) போலீஸ் குழு ஒன்று இன்று காலை மதுரை வந்தது.
அக்குழுவினர் மதுரையிலுள்ள ஒரு விடுதியில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். இதன்பின் காலை நேரத்தில் நரிமேடு பகுதியில் டெல்லியில் சிக்கிய நபர் குறித்து விசாரித்தனர். அவரது உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் அப்பகுதியில் வசிக்கிறார்களா எனவும் விசாரித்துவிட்டுச் சென்றனர்.
இது குறித்து உள்ளூர் போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘டெல்லியில் சிக்கிய நபர்களில் ஒருவரை பற்றி விசாரிக்க, தேசிய புலனாய்வு பிரிவு போலீஸ் குழு மதுரை வந்துள்ளது என்பதை உறுதி செய்ய முடிகிறது. ஆனால் அவர்கள் உள்ளூர் போலீஸாரின் உதவியை கோரவில்லை. இது போன்ற விசாரணையின்போது, கைது நடவடிக்கை இருந்தால் மட்டுமே எங்களது உதவியை அணுகுவது வழக்கம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT