Published : 26 Jul 2015 10:34 AM
Last Updated : 26 Jul 2015 10:34 AM

பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

27-ம் தேதி நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்படாவிட்டால் ஏற்கெனவே திட்டமிட்டபடி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.சிவா கூறியுள்ளார்.

திரைப்பட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தென் னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (பெப்சி) தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென்று புதிய ஊதிய உயர்வை பெப்சி அறிவித்தது. இதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 27-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப் படும் என்று அறிவித்தனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.சிவா கூறியதாவது:

27 ம் தேதி முதல் படப்பிடிப்பு களை ரத்து செய்வதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதேபோல 27-ம் தேதி நடக்கவுள்ள பேச்சுவார்த் தையில் சுமுகமான தீர்வு எட்டப் படாவிட்டால் படப்பிடிப்பை தொடர்ந்து ரத்து செய்யவும் முடிவெடுத்திருக்கிறோம். கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையில் சரியான முடிவு எட்டுவதற்கு முன்பே திடீரென சம்பள உயர்வு குறித்து பெப்சி எப்படி அறிவிக்கலாம்? இந்த முடிவுக்கு இயக்குநர் சங்கமும், நடிகர் சங்கமும் ஒத்துழைப்பு கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்பிரச்சினை குறித்து பெப்சி அமைப்பின் தலைவர் ஜி.சிவா கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் முறையே கலந்தாலோசித்துதான் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுத்தோம். சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை புதன்கிழமை வெளி யிடுவதாக இருந்தது. ஆனால் இப்ராகிம் ராவுத்தரின் மறைவைத் தொடர்ந்து அப்போது அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை அறிவிப்பை வெளியிட தயாரிப்பாளர் சங்க நிர்வாகி களுடன் ஆலோசித்து முடி வெடுக்கப்பட்டது. இப்போது ஏற் பட்டுள்ள பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் விரைவில் தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இப்பிரச்சினை குறித்து நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் ராதா ரவி கூறும்போது, “இப்படி ஒரு சூழல் உருவானது துரதிஷ்ட வசமானது. ஒரு நாள் படப் பிடிப்பு நின்றாலும் அதனால் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பாதிப் படைவார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் தொழிலாளர் களுக்கு பாதிப்பில்லாத வகையில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x