Published : 17 Jul 2019 08:31 AM
Last Updated : 17 Jul 2019 08:31 AM
சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்து மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் சபா.ராஜேந்திரன், ‘‘சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு ஏற்படுத்துவதில் போக்குவரத்து வாகனங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. மாசை குறைக்கும் கடமை போக்குவரத் துக் கழகத்துக்கு உண்டு. அதன் அடிப்படையில் மாசு குறைவாக இருக்கும் பேருந்துகளை அறிமுகப் படுத்துவதாக, ஆளுநர் உரை, நிதி நிலை அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. பிஎஸ் -6 வாக னங்கள் மற்றும் மின்சார வாக னங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிக்கைகள்தான் வருகின் றன. வாகனங்களை சாலைகளில் துரிதமாக கொண்டுவர வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வாகனங்களை இயக்க வேண்டும் என்பது உலக அள வில் பெரிய விஷயமாக எடுத் துக் கொள்ளப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதலை தடுக்கும் வகை யில், சி-40 என்ற அமைப்புடன், நாட்டில் முதல் முறையாக தமிழ கம் சார்பில் முதல்வர் கையொப்ப மிட்டார். ஜெர்மன் நாட்டு வங்கி யின் உதவியுடன், குறைந்த வட்டி விகிதத்தில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள், 12 ஆயிரம் பிஎஸ் -6 பேருந்துகளை வாங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கருத்துரு மத்திய அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் 80 பேருந்துகள், கோவை, மதுரையில் தலா 10 பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சோதனை ஓட்டமாக அசோக் லேலண்ட் நிறுவனம் 2 பேருந்துகளை தங்கள் சொந்த செலவில் சென்னையில் இயக்க ஒப்புக் கொண்டு அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் அந்த வாகனங்கள் சென்னையில் இயக் கப்படும். அதேபோல், மின்சார பேருந்துகள் வரும்போது, விரை வில் இ-பாலிசியை அறிமுகப் படுத்த உள்ளோம். மின் பேருந்து களுக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளோம். எந்த இடங் களில் சார்ஜிங் கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம் என ஆய்வுப் பணி முடிந்துள்ளது. மிக விரைவில் சென்னையில் மின்சார பேருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT