Published : 12 Jul 2015 11:17 AM
Last Updated : 12 Jul 2015 11:17 AM

ஜனநாயக மாண்புகளை நிலை நாட்ட நிர்வாகம், நீதித் துறைகளிடையே ஒற்றுமை நிலவ வேண்டும்: முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் வலியுறுத்தல்

இந்தியாவின் ஜனநாயக மாண்பு களை நிலைநாட்ட சட்டம், நிர் வாகம், நீதி ஆகிய துறை களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் வலியுறுத்தி யுள்ளார்.

இந்தியாவின் 15 மற்றும் 16-வது மக்களவையில் சிறப்பாக செயல்பட்ட 7 எம்.பி-க்களுக்கு சன்சத் ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஐஐடி-யில் நேற்று நடந்தது. பிரைம் பாய்ண்ட் அமைப்பு, பிரீ சென்ஸ் இணைய இதழ், சென்னை ஐஐடி இணைந்து இதற்கு ஏற்பாடு செய்திருந்தன.

15-வது மக்களவையில் சிறப்பாக செயல்பட்ட மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், ஆனந்தராவ் அட்சூல் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகிய எம்.பி-க்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் 16-வது மக்களவையில் சிறந்து விளங்கியமைக்காக பி.பி.சவுத்ரி, ரங்க் அப்பா பார்னே, நிஷிகாந்த் துபே, சுப்ரியா சுலே ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசியதாவது: சட்டம், நிர்வாகம் மற்றும் நீதி ஆகியவை நாட்டின் கட்டமைப் புக்கு தூண்களாக விளங்கு கின்றன. கூட்டாட்சி தத்துவத்தை கொண்ட நமது நாட்டில் எழுதப்பட்ட அரசியல் அமைப்பு உள்ளது. அந்த அரசியல் அமைப்பின்படிதான் நாடு செயல்படுகிறது. இந்தியாவின் ஜனநாயக மாண்புகளை நிலை நாட்ட சட்டம், நிர்வாகம், நீதி ஆகிய துறைகளிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை இயக்குநர் னிவாச பிரபு, பிரைம் பாய்ண்ட் நிறுவனர் கே.சீனிவாசன், ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x