Published : 09 Jul 2015 07:48 AM
Last Updated : 09 Jul 2015 07:48 AM

கடத்தல் பொருட்களை தவிர்க்க அனைவரும் உறுதியேற்க வேண்டும்: சிபிசிஐடி அதிகாரி வலியுறுத்தல்

கடத்தல் பொருட்களை வாங்க மாட்டோம் என அனைவரும் உறுதி யேற்க வேண்டும் என்று தமிழக சிபிசிஐடி ஏடிஜிபி கரண் சின்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஃபிக்கி (இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு) சார்பில் ‘சட்டவிரோத வர்த்தகம் - தேசிய நலனுக்கான அச்சுறுத்தல்’ என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கம், சென்னை தி.நகரில் நடந்தது. அப்போது, ஃபிக்கியின் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.

கருத்தரங்கில் டெல்லி காவல் துறை முன்னாள் ஆணையர் தீப் சந்த் பேசும்போது, ‘‘சட்ட விரோத செயல்களுக்கு தேவை யான நிதி ஆதாரங்களை கள்ளச் சந்தை விற்பனை மூலம் திரட் டிக் கொள்கின்றனர். கள்ளச் சந்தை விற்பனை வருவாயின் ஒரு பகுதியை அந்த நிறுவனங் கள் தீவிரவாத இயக்கங்களுக்கு வழங்குகின்றன. நுண்ணறிவுப் பிரிவு இதை உறுதி செய்துள்ளது’’ என்றார்.

தமிழக சிபிசிஐடி ஏடிஜிபி கரண் சின்கா பேசும்போது, ‘‘சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் துறைமுகம் இருப்பதால் கடத்தல் பொருட்கள் எளிதாக வந்து விடுகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் மற்ற இடங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன. கடத்தல் பொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் அவற்றை பொதுமக்கள் வாங்குகின்றனர். நாட்டின் நலனுக்கு எதிரான கடத்தல் பொருட்களை வாங்க மாட்டோம் என்று பொதுமக்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண் டும்’’ என்றார்.

பாக்கெட் உணவுகள், கணினி வன்பொருட்கள், ஆட்டோ மொபைல், செல்போன், புகை யிலை, மதுபானம் ஆகியவற்றின் விற்பனை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 2012-ம் ஆண்டு ரூ.26,190 கோடியாக இருந்த இந்த பொருட்களின் கள்ளச்சந்தை விற்பனை, 2014-ல் ரூ.39,239 கோடி யாக அதிகரித்துவிட்டது.

தமிழகத்தில் கள்ளச்சந்தை விற்பனையில் மதுவும், சிகரெட் டும் தலா 20 சதவீதத்தை பிடித்து முதலிடத்தில் உள்ளன’ என்று ஃபிக்கி ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x