Published : 04 Jul 2015 02:38 PM
Last Updated : 04 Jul 2015 02:38 PM

ஹெல்மெட் விற்பனை கடைகள் மீது புகார்

ஹெல்மெட் விற்பனையில் முறைகேடுகளைத் தடுக்க தொழிலாளர் நலத்துறை கண்காணிப்பைத் தொடங்கி உள்ளது. அதிகபட்ச சில்லரை விலைக்கு மேல், ஹெல்மெட்கள் விற்பனை செய்யும் கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் ஹெல் மெட் விற்பனை முறைகேடுகளைத் தடுக்க 5 குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புகார் தெரிவிக்க 9445398752 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டது. நேற்று முதல் இதில் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

முதல் நாளில் பெறப்பட்ட புகார்கள் குறித்து கோவை மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘காலை முதல் நூற்றுக்கணக்கான புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அதில் எந்த ஹெல்மெட் வாங்குவது, வாங்கியவுடன் உடைந்துவிட்டது, ரசீது கொடுப்பதில் பிரச்சினை என்பது போன்ற புகார்களே வருகின்றன. முதல் நாளில் 2 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த விற்பனைக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் இந்த புகார் எண்ணை முறையாக பயன்படுத்த வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x