Published : 30 Jul 2015 10:14 AM
Last Updated : 30 Jul 2015 10:14 AM

அரசு வழக்கறிஞர்கள் பற்றாக்குறையால் குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதாக புகார்

அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட அலுவலர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மாநிலம் முழுவதும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவதாக கூறப்படுகிறது.

கொலை வழக்குகள் அல்லாத பிற வழக்குகள் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் (மாஜிஸ்திரேட் கோர்ட்) விசாரிக்கப்படுகின்றன. இவற்றில் அரசு தரப்பில் வாதிடு வதற்காக அரசு உதவி வழக்கறி ஞர்கள், அரசு வழக்கறிஞர் (நிலை 1) உள்ளிட்டவர்கள் நியமிக்கப்படு கின்றனர். இதில்லா மல், செஷன்ஸ் மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஆளும் கட்சியால் நியமிக்கப்படு பவர்களும் அரசு வழக்கறிஞர்களாக செயல்படுவார்கள்.

மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக் கான அரசு வழக்கறிஞர்கள், உள் துறையின்கீழ் உள்ள மாநில குற்ற வழக்கு தொடர்வு இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் வருகிறார்கள். இந்த இயக்ககத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நீண்ட நாட்களாக நிரப்பப்படாமல் இருப்பதாலேயே வழக்குகளில் தேக்கநிலை ஏற் படுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அத்துறை சார்ந்த வழக்கறி ஞர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 375 மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் 204 அரசு உதவி வழக்கறிஞர்கள் பணியில் உள்ளனர். அரசு வழக்கறிஞர்கள் (நிலை 1) 119 பேருக்கு 72 பேர் மட்டுமே உள்ளனர். துறைக் கான உதவி இயக்குநர்கள் மாவட் டத்துக்கு ஒருவர் இருக்க வேண் டும். ஆனால், தற்சமயம் 15 உதவி இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் 48 பேருக்கு 37 பேர்தான் உள்ளனர். 11 துணை இயக்குநர்களுக்கு பதிலாக 5 பேர் மட்டுமே உள்ளனர். துறையின் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால் ஒரு அரசு வழக்கறிஞரே பல நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படுகிறது. மாதம் 20 சதவீத வழக்குகளை விசாரித்து முடிக்க வேண்டும், அதில் 80 சதவீத வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும், மாதத்துக்கு 100 சாட் சிகளை விசாரிக்க வேண்டும் என் றெல்லாம் எங்களுக்கு நிபந்தனை கள் வைக்கப்பட்டாலும் 25 சதவீத வழக்குகளில்தான் ஆஜராகி குற்ற வாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடிகிறது.

எங்களுக்கான பணியிடம் துணை கலெக்டர் அந்தஸ்து கொண் டது. ஆனால், பெரும்பாலான நீதி மன்றங்களில் எங்களுக்கு பிரத் யேக அறைகூட கிடையாது. இயற்கை உபாதைகளுக்கு செல்லகூட சரியான இடமில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநில குற்றவழக்கு கள் தொடர்வுத் துறை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.சண்முகத்திடம் கேட்டபோது, “பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மைதான். ஆனால், இந்த காரணங்களுக்காக வழக்கு விசாரணைகளில் தேக்க நிலை ஏற்படவில்லை. காலியாக உள்ள இயக்குநர், இணை இயக்குநர் பதவிகள், 6 துணை இயக்குநர்கள் பதவிகள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் (நிலை 1) பணியிடங்களை நிரப்பக் கேட்டு அரசுக்கு எழுதி இருக்கிறோம்.

அத்துடன், மாவட்டத்துக்கு ஒரு கூடுதல் அரசு வழக்கறிஞர் வீதமும் லஞ்ச ஒழிப்புத்துறை பணிக் கென மாவட்டத்துக்கு ஒரு துணை சட்ட ஆலோசகர் வீதமும் பணி யிடங்களை உருவாக்கவும் கேட்டி ருக்கிறோம். நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களுக்கு அறை கள் ஒதுக்குவது பற்றியும் பேசி இருக்கிறோம். அனைத்தை யும் விரைந்து செய்து கொடுப்ப தாக அரசு தரப்பில் உறுதியளித் திருக்கிறார்கள்.’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x