Published : 01 Jul 2015 08:23 AM
Last Updated : 01 Jul 2015 08:23 AM

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா வெற்றி: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு ஆளுநர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர் கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதைய டுத்து, ஜெயலலிதாவுக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா தொலைபேசி மூலம் நேற்று வாழ்த்து தெரிவித்தார். ஆளுநருக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஜெயலலிதா வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் (மத்திய அமைச்சர் பாஜக):

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்.

சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி):

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் குறைகளை பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாலும், மக்களின் பேராதரவு முதல்வர் ஜெயலலிதாவின் பக்கம்தான் என்பது இடைத்தேர்தல் முடிவின் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி):

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 1.51 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற்றுள் ளார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியை யும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் ந.சேதுராமன் (மூவேந்தர் முன்னணி கழகம்):

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள். ஆர்.கே.நகரிலுள்ள குடிநீர் உள்ளிட்ட பிரச்சினைகளை ஜெயலலிதா உடனடியாக தீர்க்க வேண்டும்.

ஒய்.ஜவஹர் அலி (இந்திய தேசிய முஸ்லிம் லீக்):

இந்தியாவில் யாரும் படைக்காத சாதனையை ஆர்.கே.நகரில் படைத் துள்ள ஜெயலலிதாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நவாப் முகம்மது அப்துல் அலி (ஆற்காடு இளவரசர்):

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியின் மூலம், ஜெயலலிதா தானொரு மாபெரும் ஆளுமை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது பணி தொடர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x