Published : 12 Jul 2015 11:28 AM
Last Updated : 12 Jul 2015 11:28 AM

சீனாவைவிட இந்தியாவில்தான் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம்; 58 கோடி பேர் உள்ளனர்- தமிழ் வளர்ச்சித் துறை செயலர் பெருமிதம்

சீனாவைவிட இந்தியாவில்தான் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். இளைஞர்கள் லட்சியத் துடன் செயல்பட்டு நாட்டை முன் னேற்ற வேண்டும் என்று தமிழக தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை செயலாளர் மூ.ராஜாராம் கூறினார்.

‘அமைதி நிறைந்த தேசங்களை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் தலை மைப் பண்பு பற்றிய ஒருநாள் பயிலரங்கம் சென்னை பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. இந்திய சர்வதேச அமைதி கூட்டமைப்பு, உலக அமைதி குடும்ப கூட்டமைப்பு, சென்னை பல்கலைக்கழக உளவியல் துறை இணைந்து இதற்கு ஏற்பாடு செய்திருந்தன. பயிலரங்கை தொடங்கிவைத்து தமிழக தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை செய லாளர் மூ.ராஜாராம் பேசியதாவது:

இந்தியாவில் 15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளை ஞர்கள் 58 கோடி பேர் இருக் கின்றனர். சீனாவைவிட இந்தி யாவில்தான் இளைஞர்கள் எண் ணிக்கை அதிகம். உலக அரசி யலில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவர்கள் இளைஞர் கள்தான். உலக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் பலர் இளம் வயதிலேயே அரியணையேறி சாதனை படைத்துள்ளனர். இளை ஞர்கள் புதிய லட்சியத்தை கருவி யாகக் கொண்டு தலைமை ஏற்று நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்ல வேண்டும். அப்போதுதான் பாரதி, சுவாமி விவேகானந்தரின் லட்சியம் நிறைவேறும்.

இவ்வாறு ராஜாராம் கூறினார்.

துணைவேந்தர் ஆர்.தாண்ட வன் தலைமையுரை ஆற்றிப் பேசும்போது, ‘‘தேசங்கள் அமைதி யாக இருக்கவேண்டும் என்றால் நாட்டின் குடிமக்கள் அமைதியை விரும்புவோராக இருக்க வேண்டும். அமைதியின் தவிர்க்க முடியாத எதிரி கர்வம். இதை விட்டொழித்தாலே எங்கும் அமைதி நிலவும்’’ என்றார்.

இந்திய மகளிர் சங்கத் தலை வரும், மறைந்த முன்னாள் குடியர சுத் தலைவர் ஆர்.வெங்கட் ராமனின் மகளுமான வி.பத்மா வெங்கட்ராமன், ஒருங்கிணைந்த காந்திய பேரவை அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலர் பி.மாருதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக, பல்கலைக் கழகத்தின் உளவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாநிதி வரவேற்றார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் பிரேந்திர ஸ்ரேஷ்டா அறிமுக வுரை ஆற்றினார்.

நிறைவாக, இந்திய சர்வதேச அமைதி கூட்ட மைப்பின் தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கருணா கரன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x