Last Updated : 01 Jul, 2015 05:13 PM

 

Published : 01 Jul 2015 05:13 PM
Last Updated : 01 Jul 2015 05:13 PM

பாரதியார் பல்கலைக்கூடத்தில் உதவிப்பேராசிரியர்கள் நியமனத்தில் யூஜிசி வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் 2 ஆண்டுகள் போராடி புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்கள் கல்வித்தகுதி விவரம் கிடைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் பணி நியமனத்தில் பின்பற்றவில்லை என்ற புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசுக்குச் சொந்தமான பாரதியார் பல்கலைக் கூடத்தில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதி விவரம் கேட்டு புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணம்மாள் என்பவர் கடந்த 2013ல் விண்ணப்பித்தார். இரண்டு ஆண்டுகள் போராட்டத் துக்கு பிறகு தற்போது அந்த விவரங் களை பெற்றுள்ளார். இதுதொடர் பாக 'தி இந்து' உங்கள் குரலில் அவர் தகவல் தெரிவித்திருந்தார். உதவிப் பேராசிரி யர்கள் பணிநிய மனத்தில் யூஜிசி வழிகாட்டுதல் பின்பற்றவில்லை என்றும் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக கண்ணம்மாள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

புதுச்சேரி அரசுக்கு சொந்தமாக பாரதியார் பல்கலைக்கூடம் உள்ளது. இங்கு சிற்பம், ஓவியம், நடனம் உட்பட பல்வேறு கலைகள் கற்று தரப்படுகின்றன. ஆனால் இங்குள்ள உதவிப்பேராசிரியர்கள் கல்வித்தகுதி சரியாக உள்ளதா என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கடந்த 5.4.2013ல் மனு அளித்தேன். ஆனால் தகவல் தர இயலாது என்று 3.5.2013ல் பதில் தரப்பட்டது.

கேட்கப்பட்ட தகவல் பொது வானது. அதை தர மறுப்பது சரியானதல்ல என்று 16.5.2013ல் மேல்முறையீடு மனு அளித்தேன். ஆனால் மேல்முறையீட்டிலும் தகவல் தர இயலாது என்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து மேல் முறையீட்டு அதிகாரி வழங்கிய உத்தரவை எதிர்த்து டெல்லியிலுள்ள மத்திய தகவல் தொடர்பு ஆணையத்தில் கடந்த 21.8.2013ல் இரண்டாவது முறை யாக மேல்முறையீடு செய்தேன்.

இரண்டாவது மேல்முறையீட்டு மனு மீதான வீடியோ கான்பரசிங் கடந்த 9.7.2014ல் தலைமை செய லகத்தில் நடைபெற்றது. அப்போது பொதுத்தகவல் அதிகாரியும், மேல்முறையீட்டு அதிகாரியும் ஒருவராக இருப்பது தவறானது என்று சுட்டிக்காட்டினோம்.

விசாரணையின்போது மேல் முறையீட்டு அதிகாரி எவ்வித நேர்காணல் இல்லாமல் உதவிப் பேராசிரியர்கள் தற்காலிக மாக நியமிக்கப்பட்டதாக ஒப்புக் கொண் டார். முழுமையாக விசாரித்த மத்திய தகவல் ஆணையம் பாரதி யார் பல்கலைக்கூடத்தில் பணி புரியும் உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதி குறித்த விவரங்களை 3 வாரங் களுக்குள் வழங்குமாறு கடந்த மே 12ம் தேதி உத்தரவிட்டது.

மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுப்படி பாரதியார் பல்கலைக் கூடத்தில் பணிபுரியும் உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதி குறித்த தகவல்கள் தற்போது தரப்பட்டுள்ளது. விஷுவல் ஆர்ட் பிரிவில் 15 பேரும், இசைப்பிரிவில் 9 பேரும் நடன பிரிவில் 4 பேரும் உள்ளனர். இதில் 25 பேர் உதவி பேராசிரியர்கள். அவர்களில் பல உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்கள் பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல் படி நியமிக்கப்படவில்லை.

யூஜிசி விதிமுறைப்படி உதவி பேராசிரியர்களாக இருப்பவர்கள் பட்டமேற்படிப்பில் 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்கவேண்டும். நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎச்டி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பல உதவிப் பேராசிரியர்கள் இத்தகுதியை பெற்றிருக்கவில்லை.

ஆண்டுதோறும் புதுச்சேரி பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு குழுவினர் ஆய்வு செய்வது வழக்கம். ஆய்வில் என்ன செய்தார்கள் என்பது தெரிய வில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் விண்ணப்பித்து 2 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு இத்தகவல் தரப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர் பாக விரைவில் முடிவு எடுப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x