Published : 20 Jul 2015 08:53 AM
Last Updated : 20 Jul 2015 08:53 AM

மத்தியிலும், மாநிலத்திலும் தேர்தல் கூட்டணியில் வெவ்வேறு கொள்கையா? - பாமக.வுக்கு தமிழிசை சவுந்தரரராஜன் கேள்வி

மத்தியிலும், மாநிலத்திலும் தேர் தல் கூட்டணியில் பாமக வெவ் வேறு கொள்கைகளை கடைப் பிடிக்கிறதா என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.

பாஜக சார்பில் ஈரோட்டில் நடந்த மக்கள் தொடர்பு இயக் கம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழிசை சௌந்தரராஜன் நேற்று கோவை வந்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பங்கினால்தான் தரும புரி நாடாளுமன்றத் தேர்தலில் பாமக வெற்றி பெற்றது என்பதை உணர வேண்டும். தேசியத்தில் கூட்டு, மாநிலத்தில் கூட்டு இல்லை என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். எனவே வேறுபாட்டுத்தனமாக பேசுவதை அந்தக் கட்சி கைவிட வேண்டும்.

இரு திராவிட கட்சிகளின் ஆட்சியை அப்புறப்படுத்த வேண் டும் என்ற நோக்கம் பாமகவுக்கு உண்மையாக இருந்தால், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட வேண்டும்.

செயல்படாத அரசு

தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல் பெருகியுள் ளது. அதானி குழுமத்துடன் மின்சார ஒப்பந்தத்தை எந்த அடிப்படையில் செய்துகொண்டது என்பது தொடர்பாக தமிழக அரசு தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.

அதானி குழும விவகாரத்தில் வைகோ, இளங்கோவன் போன்ற வர்கள் அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் வியாபம் ஊழல் என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது.

பாஜக முதல்வர்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு களுக்கு அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வரு கிறார்கள். பாஜகவினர் குற்ற மற்றவர்கள் என்பது விசார ணையில் தெளிவுபடுத்தப்படும்.

தமிழக காய்கறிகள் பரிசோதனை செய்து அதில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பாதிப்பில்லை என்பதை கேரள அரசுக்கு தெளிவுபடுத்த வேண் டும். இங்கு, காய்கறி, மருந்துகள், பால் போன்றவை பரிசோதிக்க போதுமான வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.

காய்கறிகள் விவகாரத்தில் தமிழக அரசு எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் இருந்து வருவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x