Published : 26 Jul 2015 09:53 AM
Last Updated : 26 Jul 2015 09:53 AM

அதிகபட்ச வட்டி வழங்கும் ‘வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா’திட்டம்: மூத்த குடிமக்களுக்கு எல்.ஐ.சி அழைப்பு

அதிகபட்ச வட்டி வழங்கும் வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா திட்டத்தில் மூத்த குடிமக்கள் சேர வேண்டும் என்று எல்.ஐ.சி. நிறுவன தென்மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

மூத்த குடிமக்களுக்காக எல்.ஐ.சி. நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ‘வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா’ என்ற திட்டம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது. இப்பாலிசியின் சிறப்பம் சங்கள் குறித்து, எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

நடப்பு நிதியாண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் தென்மண்டலம் சார்பில் மொத்தம் 4.18 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், பிரீமிய வருமானமாக ரூ.428 கோடி கிடைத்துள்ளது.

மூத்த குடிமக்கள் தங்களது முதுமை காலத்தில் வறுமையில் வாடுகின்றனர். இதை தவிர்ப்பதற்காக ‘வரிஷ்ட பென்ஷன் பீமா யோஜனா’ என்ற பென்ஷன் திட்டம் கடந்த 2014 ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சேர முடியும். இப்பாலிசி தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 24,068 பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பிரீமியம் தொகையாக ரூ.656 கோடி வசூல் ஆகியுள்ளது.

இத்திட்டத்தில் சேருபவர்களுக்கு ஆண்டொன்றுக்கு மிக அதிகபட்சமாக 9.38 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், ரூ.66,665 செலுத்தினால் மாதந்தோறும் ரூ.500 பென்ஷன் தொகை யாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.6,66,665 செலுத்தினால் மாதந்தோறும் ரூ.5,000-ம் பென்ஷன் வழங்கப்படும்.

முதலீடு செய்த மூன்று ஆண்டு களுக்குப் பிறகு கடன் வசதி உண்டு. 15 ஆண்டுகள் கழித்து பாலி சியை சரண்டர் செய்யலாம். பாலிசி தாரர் இறக்க நேரிட்டால் முதலீட்டுத் தொகை நியமனதாரருக்கு வழங்கப் படும். வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளை கள் தங்களது பெற்றோர்களுக்கு மாதா மாதம் பணம் அனுப்புவதை விட அவர்கள் பெயரில் மேற்கண்ட தொகையை செலுத்தி பாலிசி எடுத்தால் பெற்றோர்களுக்கு மாதம்தோறும் பென் ஷன் தொகை கிடைக்கும். இத்திட்டம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதியோடு நிறைவடைகிறது. எனவே, அதற்குள் இப்பாலிசியை வாங்காதவர்கள் வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு டி.சித்தார்த்தன் கூறினார்.

இச்சந்திப்பின் போது, எல்.ஐ.சி. நிறுவன மண்டல மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்) எஸ்.ஜான்சன் உடன் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x