Published : 19 Jul 2015 10:41 AM
Last Updated : 19 Jul 2015 10:41 AM

கல்வி நிறுவனங்களில் அரசியல் தலையீடுகளை தவிர்க்க வேண்டும்: சென்னை விழாவில் கான்பூர் ஐஐடி தலைவர் வேண்டுகோள்

கல்வி நிறுவனங்களில் அரசியல் தலையீடுகளை தவிர்க்க வேண்டும் என்று கான்பூர் ஐஐடியின் தலைவரும் அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தருமான எம்.அனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர் வி.எல்.எத்திராஜின் 125-வது ஆண்டு பிறந்த நாள் விழா, நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எம்.அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:

உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் எப்போதும் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்திருக் கின்றன. இந்தியாவில் மத்திய அரசு நிறுவனங்களில் பெரிய அளவில் அரசியல் தலையீடுகள் இல்லை. ஆனால், மாநில கல்வி நிறுவனங் களில் தலையீடுகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நான் பணியாற்றிய காலத் தில், தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரைத் தவிர வேறு எந்த அரசியல் தலைவரும் வளாகத் துக்குள் நுழையக் கூடாது என்று கூறியிருந்தேன். இதுபோன்று, அரசியல் தலையீடு இல்லாமல் ஒரு கல்வி நிறுவனத்தின் சுயாட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

தனியார் பல்கலைக்கழகங்களை மாநில அரசின் சட்ட அதிகாரத்துக்கு உட்பட்டு நிறுவலாம் என்ற நிலை உருவான பிறகு, பல பல்கலைக் கழகங்கள் புதிதாக வந்துள்ளன. 2006-07-ம் ஆண்டில் 15 தனியார் பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 203 தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் பல, அதிக லஞ்சம் கொடுத்து, நிலத்தை அபகரித்து உருவாக்கப்பட்டவை. பணத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.

நல்ல நோக்கத்துக்காக சிறந்த மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல கல்வி நிறுவனங்கள் இன்று மோச மான நிலையில் உள்ளன. ஆனால், எத்திராஜ் கல்லூரி சிறப்பாக செயல் பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அனந்தகிருஷ்ணன் கூறினார்.

விழாவில் கல்லூரி நிறுவனர் வி.எல்.எத்திராஜின் சிறப்பு அஞ்சல் உறையை சென்னை மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் வெளியிட்டார். வி.எல்.எத்திராஜுக்கு விருப்பமான பாடல் தொகுப்பு குறுந்தகடாக வெளியிடப்பட்டது. சென்னை பல்கலைக்கழக பிரதிநிதி கந்தசாமி, எத்திராஜ் கல்லூரி முதல்வர் ஏ.நிர் மலா, அறக்கட்டளை தலைவர் வி.எம்.முரளிதரன், உறுப் பினர்கள் எஸ்.விட்டல், சந்திராதேவி தணிகாசலம், நிதி அறங்காவலர் டி.எம்.நாகராஜன் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x