Published : 08 Jul 2015 08:39 AM
Last Updated : 08 Jul 2015 08:39 AM

வேளாண்மை பல்கலைக்கழக முதல்கட்ட கலந்தாய்வில் 1,326 பேர் தேர்வு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 13 இளம் அறிவியல், இளம் தொழில் நுட்ப படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வில், 1,326 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்களே அதிகளவில் கலந்து கொண்டதாக பல்கலைக்கழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் தமிழகம் முழு வதும் உள்ள உறுப்பு மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் 13 இளம் அறிவியல் மற்றும் இளம் தொழில்நுட்ப பட்டப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் மொத்தமுள்ள 2,340 இடங்களுக்கு 29,947 விண்ணப்பங்கள் பெறப்பட் டன. கடந்த 27-ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப் பட்டது.

முதல் கட்டமாக, சிறப்புப் பிரிவினருக்காக கலந்தாய்வு கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பொதுப் பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வு, ஜூன் 29-ம் தேதி தொடங்கியது. கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் 9 நாட்கள் நடைபெற்று நேற்றுடன் இந்த கலந்தாய்வு முடிவுற்றது.

இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 400 முதல் 450 பேர் என மொத்தம் 3,300 பேருக்கு முதல் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இறுதியாக 1,326 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக முதல்வர் மகிமைராஜா கூறும்போது, ‘1,461 இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வில், இதுவரை 1,326 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் 135 இடங்கள் காலியாக உள்ளன. காத்திருப்போர் பட்டியலில் 326 மாணவர்கள் உள்ளனர். வரும் 13-ம் தேதி வரை மாணவர்கள், தங்களது இடங்களை உறுதி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 18-ம் தேதி முதல் 2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்க உள்ளது. காலி இடங்களுக்கு ஏற்ப அந்த கலந்தாய்வு நடத்தப்படும்’ என்றார்.

முதல் கட்ட கலந்தாய்வில், குறிப்பிடும்படியாக மாணவர் களை விட மாணவிகளே அதி களவில் கலந்துகொண் டுள்ளனர். மேலும், இளம் அறிவியல் வேளாண்மை, இளம் அறிவியல் தோட்டக் கலை ஆகிய துறைகளுக்கு அதிக ஆர்வம் காணப்பட்ட தாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x