Published : 05 Jul 2015 11:35 AM
Last Updated : 05 Jul 2015 11:35 AM

கலவர சம்பவத்தைக் கண்டித்து ஆம்பூரில் முழு கடையடைப்பு

ஆம்பூர் கலவரத்தைக் கண் டித்து வியாபாரிகள் நேற்று முழு கடையடைப்புப் போராட் டம் நடத்தினர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஷமீல் அஹ்மது போலீஸாரால் தாக்கப்பட்டு கடந்த 26-ம் தேதி இறந்தார். இதுதொடர்பாக கடந்த 27-ம் தேதி இரவு ஆம்பூரில் நடந்த கலவரத்தில் 32 போலீஸார் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 7 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீஸார், இதுவரை 100க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

கலவரத்தைத் தொடர்ந்து ஆம்பூரில் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலம் நடத்த போலீஸார் தடை விதித்துள்ளனர். சவ ஊர்வலம், திருமண ஊர்வலத்தைத் தவிர பிற நிகழ்ச்சிகளுக்கான ஊர்வ லங்கள் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆம்பூரில் நடந்த கலவரத்தைக் கண்டித்து வரும் 7-ம் தேதி வட்டாட்சியர் அலு வலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப் பினருக்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

ஆம்பூர் கலவரத்துக்கு காரண மானவர்களை கைது செய்ய வலி யுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஒரு நாள் கடையடைப்புப் போராட் டத்துக்கு அழைப்பு விடுக் கப்பட்டது. அதன்படி, ஆம்பூர் காய்கனி மார்க்கெட், பூக்கடை பஜார், ஷராப் பஜார், நேதாஜி ரோடு, எஸ்.கே.ரோடு, உமர் ரோடு, பேரணாம்பட்டு பைபாஸ் சாலை களில் உள்ள அனைத்து கடை களும் அடைக்கப்பட்டன. உணவு விடுதிகளும் இயங்க வில்லை. மருந்தகங்கள் மற்றும் ஒரு சில டீ கடைகள் மட்டும் திறந் திருந்தன.

கடையடைப்புப் போராட்டத் தால் ஆம்பூர் நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x