Published : 11 Jul 2015 08:53 AM
Last Updated : 11 Jul 2015 08:53 AM

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கணினி பயிற்சி: மத்திய அரசு நிறுவனம் ஏற்பாடு

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி அளிக்க மத்திய அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் சென்னை மண்டல உதவி வேலை வாய்ப்பு அதிகாரி பி.கே.மொகந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய ‘ஓ லெவல்’ கணினி பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, கணினி ஹார்ட்வேர் பராமரிப்பில் ‘ஓ லெவல்’ சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஓராண்டு கால பயிற்சி ஆகஸ்ட் 1-ல் தொடங்கும். ஊக்கத்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள பிளஸ் 2 (அறிவி யல் பிரிவு) முடித்த மற்றும் ஐடிஐ எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன் முடித்த ஆதி திராவிடர்கள், பழங்குடி யின மாணவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம். அறிவியல் பிரிவில் படிக் காதவர்கள் பிரிட்ஜ் கோர்ஸ் எனப் படும் இணைப்பு படிப்பு துணைத் தேர்வெழுத வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவங் களை சென்னை சாந்தோம் நெடுஞ் சாலை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் (3-வது தளம்) இயங்கி வரும் மத்திய அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 24-ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x