Published : 13 Mar 2014 02:52 PM
Last Updated : 13 Mar 2014 02:52 PM

மக்களவை தேர்தலில் போட்டியில்லை: கே.வி.தங்கபாலு அறிவிப்பு

ஜி.கே.வாசனை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலுவும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் தொகுதியில் இருந்தோ இல்லை வேறு எந்த தொகுதியில் இருந்தோ போட்டியிட தங்கபாலு விருப்பம் தெரிவிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதற்கு தார்மீக பொறுப்பேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்ததும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மக்களவை தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை காங்கிரஸ் தலைமையகத்துக்கும் தங்கபாலு தெரியப்படுத்திவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, காங்கிரஸ் தமிழக பார்வையாளர்கள் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்நிக் ஆகியோரிடம் இத்தகவலை தெரிவித்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்னர் ஜி.கே.வாசன் தேர்தலில் போடியிடப்போவதில்லை என தெரிவித்தார், தற்போது தங்கபாலுவும் அறிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து ஜெயந்தி நடராஜனும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இருந்து போட்டியிடப்போவதில்லை என விரைவில் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

சிவகங்கை தொகுதியில் தனக்கு பதிலாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x