Published : 27 Jul 2015 09:10 AM
Last Updated : 27 Jul 2015 09:10 AM

‘சர்வதேச காதி விழா’: பிரதமர் மோடி 7-ம் தேதி சென்னை வருகை - வரவேற்பு ஏற்பாடு குறித்து பாஜக ஆலோசனை

சர்வதேச காதி விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை வருகிறார். வரவேற்பு ஏற்பாடுகள் குறித்து பாஜக மாநில தலைமை நேற்று ஆலோசனையில் ஈடுபட்டது.

பிரதமராக பொறுப் பேற்ற பிறகு, அரசு மற்றும் கட்சி விழாக்களுக்காக, பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை கூட தமிழகம் வந்ததில்லை. ஹரிகோட்டா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு மோடி கடந்த ஆண்டு வந்தார். இந்த சூழலில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இந்த தகவலை உறுதிப்படுத் தும் வகையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மோடியை வரவேற்பது குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.

மோடி விருப்பம்

இதுதொடர்பாக பாஜக மாநில தலைமை நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் டெல்லியில் நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நிகழ்ச்சியை ‘சர்வதேச காதி விழா’ என்ற பெயரில் சென்னையில் நடத்த பிரதமர் விரும்பினார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் அந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது.

பிரதமரை மாநில பாஜக சார்பில் எப்படி வரவேற்பது என்பது தொடர் பாக கமலாலயத்தில் ஆலோசிக் கப்பட்டது. அதில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலூர், உள்ளிட்ட 10 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சென்னை விமான நிலையத்தி லிருந்து சென்னை பல்கலைக் கழகத்துக்கு இடைப்பட்ட 10 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, வழிநெடுக வரவேற்பு பதாகைகள் வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இது கட்சி சார்ந்த விழா இல்லை என்பதால் பிரதமர் தனது வருகையின்போது பாஜக அலுவலகமான கமலாலயத்துக்கு வரமாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x