Published : 25 Jul 2015 12:57 PM
Last Updated : 25 Jul 2015 12:57 PM

திருச்செங்கோட்டில் நாணயவியல் கண்காட்சி

வட மாநிலங்களில் வைஷ்ணதேவி உருவம் பொறித்த நாணயங்கள் அச்சிடப்பட்டதைப் போல தென்னிந்தியாவில் புகழ் பெற்ற அர்த்தநாரீஸ்வரர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட வேண்டும் என நாணயவியல் கழக தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாணயவியல் அஞ்சலியல் கழகத்தின் சார்பில் நாணயம், பணத்தாள், தபால்தலை கண்காட்சி நேற்று துவங்கியது.

மலையடிவாரம் வன்னியர் திருமண மண்டபத்தில் நடக்கும் கண்காட்சியை கோவை நாணயவியல் அஞ்சலியல் கழகத் தலைவர் பழனிசாமி,திருச்செங்கோடு கூட்டுறவாளர் பொன்னுசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாணயவியல் கழக செயலாளர்கோல்டன் சரவணன் முன்னிலை வகித்தார்.

கண்காட்சியில் நமது நாட்டின் பழமையை எடுத்து கூறும்வகையில் பழங்கால நாணயங்கள், கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட பத்திரத்தாள்கள் தங்கத்தில்அச்சிப் பட்ட பணத்தாள்கள், உள்நாட்டு வெளிநாட்டு தபால்தலைகள், பழமையான கிராம போன்கள்,அரக்கு ரிக்கார்டுகள், பூட்டுவகைகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. இவற்றுடன் கடல் குதிரைகள் நட்சத்திர ஆமைகளின் கல் படிமங்கள், கல் மரப் படிமங்களும் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. ஏராளமான மக்கள் மற்றும் மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து கோவை நாணயவியல் அஞ்சலியல் கழகத் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த கண்காட்சியில் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயங்கள் முதல் யூரோ நாணயங்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் வைஷ்ணதேவி உருவம் பொறித்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டதை போல, இந்தியாவிலேயே ஆண்பாதி பெண் பாதி உருவத்தோடு காட்சியளிக்கும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பெருமையை சிறப்பிக்கும் வகை யில் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x