Published : 05 Jul 2015 02:39 PM
Last Updated : 05 Jul 2015 02:39 PM
ஆராச்சர் நில விவகாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலமாக பேசப்பட்டு வருகிறது. மன்னர் ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், மன்னர்களை காக்கவும் பல கடுமையான முறைகள் கையாளப்பட்டன.
அரசுக்காக தூக்கு தண்ட னையை நிறைவேற்றியவர்களை ஆராச்சர்கள் என்று அழைத்தனர். ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்பே ஆராச்சர் தொழில் குமரி மாவட்டத்தில் இருந்துள்ளது. இவர்களுக்கு அரசு நிலமும், மாதச் சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார் 'இண்டேக்' அமைப்பை சேர்ந்த லால்மோகன். அவர் 'தி இந்து' நாளிதழிடம் கூறியதாவது:
தேவசகாயம் பிள்ளை
திருவிதாங்கூர் மன்னர் பாலமார்த்தாண்டவர்மா காலத்தில் (1729-1759) ஆராச்சர்கள் நாகர்கோவில் அருகிலுள்ள பார்வதிபுரத்தில் குடியிருந்து தங்கள் தொழிலை செய்தனர். 1749-ல் தேவசகாயம் பிள்ளை மதம் மாறிய காரணத்தால், மன்னன் மார்த்தாண்டவர்மாவால் கொலை தீர்ப்பு வழங்கப்பட்டு, பார்வதிபுரத்தில் குடியிருந்த ஆராச்சர்களிடம் ஒப்படைக்கப் பட்டு, துன்புறுத்தப்பட்டு ஆரல்வா ய்மொழி மலையில் வைத்து 1752-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடைசி ஆராச்சர்
ஆராச்சர் நிலத்தின் அருகில் தேவசகாயம் சிறை வைக்கப்பட்ட இடத்தில் ‘தேவசகாயம்' கோயில் என்ற ரோமன் கத்தோலிக்க வழிபாடு இடம் இன்றும் இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது ரெசிடன்ட் கர்நெல் மன்றே (1810-1819) ஆராச்சர்களின் மாத ஊதியத்தை ரூ. 17 ஆக உயர்த்தினார்.
1900-ம் ஆண்டில் திருவிதாங்கூர் மன்னர் மூலம் திருநாள் (1888-1924) 48 ஏக்கர் நஞ்சை நிலத்தை பார்வதிபுரத்தில் இருந்த ஆராச்சர்களுக்கு கொடுத்துள்ளார். ஆராச்சர் தொழில் 1970-ல் கேரளா அரசால் நிறுத்தப்பட்டது. கடைசி ஆராச்சர் ஜனார்த்தனன் 1940-ல் ஆராச்சராக நியமிக்கப்பட்டடார். அவருடைய தகப்பனார் காமாச்சிநாதன் 1940-ல் இருந்து 1970 வரை ஆராச்சர் பணி செய்தார். ஜனார்த்தனன் 117 பேரை தூக்கில் இட்டுள்ளார். ஜனார்த்தனனுக்கு அரசர் சார்பில் மாதந்தோறும் 8 கோட்டை நெல்லும், உதவித் தொகையாக ரூ. 170-ம் கிடைத்தது' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT