Published : 16 Jul 2015 08:29 AM
Last Updated : 16 Jul 2015 08:29 AM

தலைமைச் செயலகத்தில் அமைச்சர், அதிகாரிகளுக்கு உரிய மரியாதை: பாதுகாப்பு போலீஸாருக்கு உத்தரவு

தலைமைச் செயலகத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபடும் போலீ ஸாருக்கு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட வீட்டில் இருந்து தலைமைச் செயலகம் வரும் வழி யில், வழக்கமாக பாதுகாப்புக்கு போலீஸார் நிறுத்தப்படுவர். அதே போல, தலைமைச் செயலக வளா கத்திலும் ஆயுதப்படை போலீ ஸார், முதல்வர் பாதுகாப்பு பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், தலைமைச் செய லகத்தில் முதல்வர் வரும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு சில உத்தரவு களை போலீஸ் தலைமை வழங்கி யுள்ளது. அந்த உத்தரவுகள் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகளையும் போலீஸாருக்கு வழங்கியுள்ளனர். அதில் கூறி யிருப்பதாவது:

* அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று வருபவர்கள் தவிர மற்ற வெளிநபர்கள் யாரையும் முதல்வர் செல்லும் வழியில் வரவோ, நிற்கவோ அனுமதிக்கக் கூடாது.

* முதல்வரின் பாதுகாப்பு வாக னங்கள் முறையாக போக்குவரத் துக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தப்பட வேண்டும்.

* வாகனங்கள் நிறுத்தும் இடத் தில் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதேனும் உள்ளதா என சோதனையிட வேண்டும்.

* தேவையில்லாமல் விவாதம் செய்வதையும், கைபேசியில் பேசு வதையும் கண்டிப்பாக தவிர்க் கவும்.

* தகுந்த நுழைவுச் சீட்டு இல்லாதவர்களை தலைமைச் செயலகத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

* பார்வையாளர்கள் பகுதியில் நிற்பவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

* அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரும்போது உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x