Published : 11 Jul 2015 08:56 AM
Last Updated : 11 Jul 2015 08:56 AM

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட சிறுபான்மை யின மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்துவர், இஸ் லாமியர், சமணர் உள்ளிட்ட சிறு பான்மையின மாணவ- மாணவி களுக்கு 2015-16ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இந்தக் கல்வி உதவித் தொகையை பெற விரும்பும் மாணவ-மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் கல்வி உதவித் தொகையைப் பெற, www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்திசெய்து, தாங்கள் பயிலும் பள்ளிகளில் வரும் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் (students login) தெரிவு செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 31-ம் தேதிக்குள் தாங்கள் பயிலும் பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x