Last Updated : 09 May, 2014 10:55 AM

 

Published : 09 May 2014 10:55 AM
Last Updated : 09 May 2014 10:55 AM

மோனோ ரயில் திட்டம்: 3வது முயற்சியில் வெற்றி பெற வைக்க அரசு தீவிரம்: தேர்தல் முடிவுக்குப் பிறகு டெண்டர் இறுதியாகிறது

சென்னை மோனோ ரயில் திட்டத் துக்கான கட்டுமான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதும், திட்டப் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மோனோ ரயில்

கடந்த 2011-ம் ஆண்டில் பதவி யேற்ற அதிமுக அரசு, சென்னை மாநகரில் பெருகி வரும் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்துக் கட்ட மைப்பு வசதியை மேம்படுத்தவும் மோனோ ரயில் திட்டத்தை அறி முகம் செய்ய திட்டமிட்டது. இத் திட்டத்தை இதற்கு முந்தைய ஆட்சியில் அறிமுகம் செய்ய அதிமுக அரசு திட்டமிட்டு, அப் போது கைவிடப்பட்டது. இதற் கிடையே, அடுத்து வந்த திமுக ஆட்சி மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்கியது. அப் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் ஆட் சிக்கு வந்த அதிமுக மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்த தொடங்கியது. இதனை செயல் படுத்தும் பொறுப்பு, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத் திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற் காக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மோனோ ரயில் பிரிவு தனியாக தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது.

நான்கு மூன்றானது

முதலில் பூந்தமல்லி-கத்திப்பாரா, பூந்தமல்லி-வடபழனி, வண்ட லூர்-வேளச்சேரி மற்றும் வண்ட லூர்-புழல் ஆகிய 4 வழித் தடங் களில் மோனோ ரயில்களை இயக் கத் திட்டமிடப்பட்டது. ஆனால், உலகிலேயே மிக நீளமானதாக அமையவிருந்த 51 கி.மீ. நீள வண்ட லூர்-புழல் மோனோ ரயில் வழித் தடம் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்களால் கைவிடப்பட்டது.

பின்னர், கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில், 3 தடங்களில் மட்டும் திட்டத்தினை செயல்படுத்த சர்வதேச டெண்டர் கோரப்பட்டது. ஆனால், அதில் சில குளறுபடிகள் நேர்ந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அதனை தமிழக அரசு ரத்து செய்தது.

இந்நிலையில், மோனோ ரயில் திட்டத்துக்கான நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான டெண்டர் மீண்டும் கோரப்பட்டது.

பின்வாங்கிய நிறுவனம்

இதற்கிடையே, இந்த திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்துவதற் கும், துரிதப்படுத்துவதற்கும் தமிழக அரசு ஒரு உயர்மட்டக் குழுவினை அமைத்தது. அந்த குழுவுக்குத் தலைமைச் செயலா ளர் தலைவராகவும், போக்குவரத் துத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அந்தக் குழுவி னர், அவ்வப்போது கூடி மோனோ ரயில் டெண்டர் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுத்து வந்தார்கள்.

அதைத் தொடர்ந்து, டெண்டர் நடைமுறைகள் ஆரம்பக் கட்டத் தைத் தாண்டி இறுதிக்கட்டத்தை அடைய இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த டெண்டரும் திடீரென ரத்து செய்யப்பட்டது. டெண்டரில் இடம் பெற்றிருந்த ஒரு நிறுவனத்தின், கூட்டு நிறுவனம் பின்வாங்கியதே அதற்குக் காரணம் எனக் கூறப் படுகிறது. இதனால் ஒரு நிறுவனம் மட்டுமே இறுதிக்களத்தில் நின்றது. தேவையற்ற சர்ச்சை யைத் தவிர்ப்பதற்காக அந்த டெண்டரும் ரத்து செய் யப்பட்டது.

மூன்றாவதாவது நிலைக்குமா?

இந்நிலையில், கடந்த மார்ச் மாதத் தில் மீண்டும் முன்றாவது முறை யாக மோனோ ரயில் திட்டத்துக் காக புதிய டெண்டர் கோரப்பட் டுள்ளது. பூந்தமல்லி-கத்திப்பாரா மற்றும் பூந்தமல்லி-வடபழனி ஆகிய இரு தடங்களில் மட்டும் இத்திட்டத்தினை செயல்படுத்த தற் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூனில் முக்கிய முடிவு

இது குறித்து அரசுத் துறையினர் கூறியதாவது:

மோனோ ரயிலை தமிழகத்தில் இயங்கச் செய்வதில் உறுதியாக இருக்கிறோம். இதற்கான முதல் கட்ட டெண்டர் விரைவில் இறுதி யாகிவிடும். அதன்பிறகு, “ஆர்எப்பி” (தொழில்நுட்பத் தகுதியை ஆராய்வதற்கானது) மற்றும் “பினான்சியல் பிட்டிங்” (திட்டச்செலவை குறிப்பிடுவது) ஆகிய நடைமுறைகள் வேகமாக முடிக்கப்படும்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, டெண்டர் நடை முறைகள் துரிதப்படுத்தப்பட்டு, ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மோனோ ரயில் கட்டுமான நிறு வனம் இறுதி செய்யப்பட்டுவிடும். இதைத் தொடர்ந்து கோவையிலும் விரைவில் இத்திட்டத்தைச் செயல் படுத்த நடவடிக்கைகள் தொடங்கி விடும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x