Published : 19 May 2014 12:57 PM
Last Updated : 19 May 2014 12:57 PM

அதிமுக நாடாளுமன்றக் குழு தலைவராக தம்பிதுரை தேர்வு

அதிமுக நாடாளுமன்றக் குழு தலைவராக தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தி:

அதிமுக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று எனது தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கழக நாடாளுமன்றம், மக்களவை, மாநிலங்களவை ஆகிய குழுக்களின் நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள்:

தலைவர்: எம்.தம்பிதுரை

துணைத் தலைவர்: வி.மைத்ரேயன்

அதிமுக நாடாளுமன்ற மக்களவை குழு நிர்வாகிகள்:

தலைவர்: எம். தம்பிதுரை

துணைத் தலைவர்: பி.வேணுகோபால்

கொறடா: பி.குமார்

பொருளாளர்: கே.என். ராமச்சந்திரன்

செயலாளர்: ஆர்.வனரோஜா

அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு நிர்வாகிகள்:

தலைவர்: வி.மைத்ரேயன்

துணைத் தலைவர்: எஸ். முத்துக்கருப்பன்

கொறடா: எல். சசிகலா புஷ்பா

பொருளாளர்: ஆர். லட்சுமணன்

செயலாளர்: டி.ரத்தினவேல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x