Published : 16 Jul 2015 08:44 AM
Last Updated : 16 Jul 2015 08:44 AM

தயங்கி நிற்கிற இளைஞர்களை வெற்றியாளர்களாக்கும் ரின் கேரியர் ரெடி அகாடமி: பேராசிரியர் பர்வீன் சுல்தானா பாராட்டு

தயங்கி நிற்கிற இளைஞர்களை வெற்றியாளர்களாக மாற்றும் பணியில் ரின் கேரியர் ரெடி அகாடமி ஈடுபட்டிருப்பதாக பேராசிரியர் பர்வீன் சுல்தானா பாராட்டிப் பேசினார்.

உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி ரின் கேரியர் ரெடி அகாடமி சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்த பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசும்போது: “இன்றைய இளைஞர்களிடம் முந்தைய தலைமுறையைவிட நிறைய தகவல் அறிவு இருக்கிறது.ஆனால்,அதை வெளிப்படுத்திட சரியான சூழலோ, வாய்ப்புகளோ கிடைப்பதில்லை.ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக பலரும் அச்சப்பட்டுத் தயங்கி நிற்கிறார்கள். மொழிக் கருவி, உடல் மொழி, ஆடை மொழி ஆகியவற்றை இளைஞர்களுக்கு கற்றுத்தந்து, அவர்களை வெற்றியாளர்களாய் மாற்றிட இருக்கிற ரின் கேரியர் ரெடி அகாடமியின் செயல்பாடுகளோடு கரங்கோர்ப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்றார்.

வாழ்த்துரை வழங்கிய டாக்டர் ஆர்.கார்த்திகேயன் பேசும்போது, ‘‘ஆங்கிலம் பேசுவது, உடை அணி வது என்பதை விடவும்,நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் குறித்து நமது இளைஞர்களிடம் இன்னமும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானேயொழிய, அது அறிவு இல்லை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல வேண்டும். கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கிற அனை வருக்கும் இதற்கான பயிற்சியை அளித்திட நான் தயாராய் இருக்கிறேன். கல்வி,ஊடகம், தொழில் என அனைத்திலும் தேர்ந்தவர்களாய் இளைஞர்களை மாற்றிட ரின் கேரியர் ரெடி அகாடமி முயற்சியெடுத்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.

சைக்கிள் பேரணியில் கலந்துகொண்ட நடிகர் ஆர்ஜெ.பாலாஜி கூறும்போது, “நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஆங்கிலம் என்றாலே தயங்கி நிற்பேன். பிறகு, பலரோடும் பழகி, பேசி ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். எதற்காக படிக்கிறோம், படித்துவிட்டு என்ன செய்யப் போகிறோம் என்கிற குழப்பத்தில் இருப்பவர்கள் ரின் கேரியர் ரெடி அகாடமி தந்துள்ள இலவச அழைப்புக்கு ஒரு போன் செய்தாலே, உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றம் உண்டாகும்” என்றார்.

சைக்கிள் பேரணியில் தி இந்து-தமிழ் விளம்பரப் பிரிவுத் தலைவர் சங்கர் சுப்பிர மணியன், பல்வேறு கல்லூரி களைச் சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x