Published : 18 May 2014 12:00 PM
Last Updated : 18 May 2014 12:00 PM
ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை பெற தனியார் பள்ளிகளில் மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில், (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கு ஆகும் கல்விக்கட்டணத்தை பள்ளி நிர்வாகத்தினருக்கு அரசு வழங்கிவிடும்.
2014-15-ம் கல்வி ஆண்டில் 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் மே 3 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இது நாளை (18-ம் தேதி) முடிவடைகிறது. இந்த நிலையில், 25 சதவீத இடஒதுக்கீட்டை 100 சதவீதம் முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, விண்ணப்பம் வழங்குவதற்கும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்கும் கடைசித் தேதியை 31-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT