Last Updated : 13 Jul, 2015 10:27 AM

 

Published : 13 Jul 2015 10:27 AM
Last Updated : 13 Jul 2015 10:27 AM

`தி இந்து’ செய்தி எதிரொலி: தனுஷ்கோடிக்கு புதிய சாலை ஜனவரியில் திறக்க ஏற்பாடு

‘தி இந்து’வில் தனுஷ்கோடி குறித்து வெளியான தொடர் செய்திகளின் எதிரொலியாக ஜனவரி மாதம் தனுஷ்கோடிக்கு புதிய நெடுஞ்சாலை திறக்கப்பட உள்ளது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் நுழைவு வாயிலாக ஆங்கிலேய ஆட்சியில் தனுஷ்கோடி துறைமுகம் 1.3.1914-ல் திறக்கப்பட்டது. இதற்காக தமிழகத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதற்காக மண்டபத்தில் இருந்து பாம்பனுக்கு ரயில் பாலமும் கட்டப்பட்டது.

இதன்மூலம் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் பயணம், அதைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னாருக்கு கப்பல் பயணம், தலைமன்னாரில் இருந்து கொழும் புக்கு மீண்டும் ரயில் என மாறிப் பயணம் செய்ய ஒரே டிக்கெட் போதுமானதாகவும் இருந்தது.

தமிழக அரசால் 1961-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் தனுஷ்கோடியில் 3,197 மக்கள் வசித்ததாகவும், இங்கி ருந்து பருத்தி துணிகள், பித் தளை, அலுமினியம், கருவாடு, முட்டை, காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் பதிவு செய் யப்பட்டுள்ளது.

தனுஷ்கோடியை 1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி கோரப்புயல் தாக் கியது. இதனால் கடல் அலைகள் கொந்தளித்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் ஆயிரக்கணக்கான மக்களும், சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். பரபரப்பாக செயல் பட்ட துறைமுகம், ரயில் நிலையம், சுங்கக்கட்டிடம், தபால் நிலையம் என அனைத்தும் கடலில் மூழ்கின.

புயலுக்கு சற்று முன்னதாக பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச் சென்ற போட் மெயில் ரயிலில் புயல் மிச்சம் வைத்தது இன்ஜினின் இரும்புச் சக்கரங்கள் மட்டுமே. ரயிலில் பயணம் செய்த வர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

புயலுக்குப் பின்னர் மக்கள் வாழத்தகுதி இல்லாத இடமாக அரசு அறிவித்தாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடிசைகளில் குடிநீர், மருத்துவம், மின்சாரம் என எவ்விதமான அடிப்படை வசதிகளும் இன்றி கடலை மட்டுமே நம்பி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றனர். தனுஷ் கோடியில் இன்றுவரை இயங்கும் ஒரே அரசு நிறுவனம் என்றால் அது தனுஷ்கோடி அரசு நடுநிலைப் பள்ளி மட்டும்தான்.

இந்நிலையில் `தி இந்து’ தமிழ் நாளிதழில் தனுஷ்கோடி குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளி வந்தன. அதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணி ஜனவரி மாதம் தொடங்கியது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ராமேசுவரம் முகுந்தராயர் சத் திரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 5 கி.மீ. தொலைவுக்கு 12 மீட்டர் அகலத்தில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் சாலை அமைக்கும் பணி முடிவடைந்து விடும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தனுஷ்கோடி சாலை திறக்கப்படும்.

அதைத் தொடர்ந்து தனுஷ் கோடியில் இருந்து அரிச்சல்முனை வரை 4.80 கி.மீ. தொலைவுக்கு ரூ.25 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கும். தனுஷ்கோடி சாலை பணியை மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வரும் 17-ம் தேதி ஆய்வு செய்ய உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x