Published : 02 Jul 2015 07:47 AM
Last Updated : 02 Jul 2015 07:47 AM

தொழிலாளர்களின் பி.எப். தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த உத்தரவு

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பை தொழிலதிபர்கள் மின்னணு பரிமாற்ற முறையில் இணையதள வங்கி சேவை மூலமாகவே செலுத்த வேண்டும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பின ராக சேர்ந்த ஒருமாத காலத்துக் குள் ஒவ்வொரு தொழிலாளியிட மிருந்தும் உறுதி ஆவண படிவம்-11ஐ (புதியது) தொழில் அதிபர் கட்டாயமாக பெற வேண்டும். படிவத்தில் உள்ள விவரங்களை நிரந்தர கணக்கு எண் (யூ.ஏ.என்.) போர்டலில் ஒவ்வொரு மாதமும் 25 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி சட்டத்தின் கீழுள்ள தொழில் நிறுவனங்களின் தொழில் அதிபர் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் நடப்பு வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்களின் நிரந்தர கணக்கு எண் விவரங்களை 15 நாட்களுக்குள் தெரிவித்து அதற்கான ஒப்புகையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட எண்ணை 15 நாட்களுக்குள் தொழிலாளர்கள் மூலமாக தொழிலதிபர்கள் செயல் முறைப்படுத்த வேண்டும். வங்கிக் கணக்கு, பான்கார்டு, ஆதார் விவரங்களை பெறப்பட்ட ஒரு மாதத்துக்குள் தொழில் அதிபர் பதிவு செய்ய வேண்டும்.

ஆதார் எண் இல்லாத உறுப் பினர்களிடமிருந்து அவ்வாறு இல் லாமைக்கான சான்றை நிரந்தர கணக்கு எண் வழங்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் பெற வேண்டும். தொழிலதிபர்கள் தொழிலாளர் களுக்கு சட்டப்படி செலுத்தப்பட வேண்டிய பங்களிப்பு தொகையை கட்டாயமாக மின்னணு பரிமாற்ற முறையிலான இணையதள வங்கி சேவையின் மூலமாகவே செலுத்த வேண்டும். இருப்பினும் குறிப்பிட்ட மாதத்தில் ஒரு லட்சத்துக்கும் குறை வாக பங்களிப்பு தொகை செலுத் தும் நிறுவனங்கள் தொடர்ந்து வங்கி காசோலைகள் மூலமாக தொகையை செப்டம்பர் 2015 வரை செலுத்தலாம். அதன் பின்னர் அனைத்து தொழில் அதிபர் களும் மின்னணு பரிமாற்ற முறையிலான இணையதள வங்கி சேவையின் மூலமாகவே செலுத்த வேண்டும்.

இவ்வாறு ஆணையர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x