Published : 07 Jul 2015 07:20 AM
Last Updated : 07 Jul 2015 07:20 AM

கல்வியில் மட்டுமின்றி ஒழுக்கத்திலும் மாணவர்கள் முதலிடம் வகிக்க வேண்டும்: அமைச்சர் டி.கே.எம்.சின்னையா கருத்து

சென்னை மேடவாக்கத்தை அடுத்த பொன்மார் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரியின் 14-வது கல்லூரி நாள் விழா மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் வி.வாசுதேவன், துணைத் தலைவர் விஷ்ணு கார்த்தி வரவேற்புரையாற்றினர். முதல்வர் சௌந்தரராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பரங்கிமலை ஒன்றிய பெருந்தலைவர் என்.சி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா நாட்டு நலப்பணித் திட்டத்தை தொடங்கிவைத்து பேசும் போது, “சென்னை புறநகர் பகுதியில் பிரின்ஸ் கல்வி குழுமத்தின் சேவை இன்றியமையாதது. குறைந்த மாணவர் களைக் கொண்டு தொடங்கப்பட்ட இக் கல்வி நிறுவனம் தற்போது 14 ஆயிரம் பேர் கல்வி பயிலும் குழுமமாக உயர்ந் துள்ளது. இதற்கு கல்லூரித் தலைவரின் கடின உழைப்பும், விடாமுயற்சியுமே காரணம். கல்வியில் மட்டுமின்றி ஒழுக் கத்திலும் மாணவர்கள் முதலிடம் பிடிக்க வேண்டும்” என்றார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமரவேல், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி னார். கலை நிகழ்ச்சிகளில் சிறந்து விளங்கிய மாண வர்களுக்கு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் தண்டரை கே.மனோகரன் பரிசு வழங்கினார். கல்லூரி நிர்வாக அதிகாரி பார்த்தசாரதி நன்றி கூறினார்.

திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆர்.ஜெயகோமதி ரகு, பொன்மார் ஊராட்சித் தலைவர் ஏ.மகேஸ்வரி அருள், திருப்போரூர் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.துளசிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x