Published : 01 Jul 2015 03:47 PM
Last Updated : 01 Jul 2015 03:47 PM

பாலிதீன் தொட்டி மூலம் புதுமையான நீர்ப்பாசனம்: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சாதனை

விவசாயிகள் பாலிதீன் தொட்டிகள் மூலம் தண்ணீரை தேக்கி புவிஈர்ப்பு விசைப்படி புதுமையான முறையில் நீர்ப்பாசனம் செய்கின்றனர்.

தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் செம்மண் விவசாய நிலப்பரப்பு அதிகளவு உள்ளன. இப்பகுதியில் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மிகுந்த ஆழமாக இருப்பதால் தண்ணீரை அவற்றில் இருந்து மோட்டார் மூலம் எடுத்து தூரத்தில் உள்ள நிலங்களுக்கு எடுத்து செல்லும்போது செம்மண் நிலப்பரப்பால் அதிகளவு நீர் உறிஞ்சப்படுகிறது. அதனால், 25 சதவீதம் முதல் 40 சதவீதம் பாசனநீர் வீணாகிறது.

இதை தவிர்க்க தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் விவசா யத் தோட்டங்களில் விவசாயிகள் பாலிதீன் தொட்டிகள் அமைத்து அதில் நீரை தேக்கி புதுமையான முறையில் பாசனம் செய்கின்றனர்.

இதுகுறித்து சிறுமலை அடிவாரம் விவசாயி மகேந்திரன் கூறியது: விவசாய நீர் பாசனத்தை பொருத்தவரையில் செம்மண் நிலப்பரப்பு சாகுபடி பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்வது மிகுந்த சிரமம். செம்மண் மற்ற நிலப்பரப்பைபோல் இல்லை. கால்வாயில் செல்லும் நீரை அதிகளவு உறிஞ்சும். மின்சாரமும் முன்போல் எப்போதும் இருப் பதில்லை. அதனால், மின்சாரம் இருக்கும்போது, ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளில் இருந்து மோட்டார் மூலம் நீரை எடுத்து, இந்த பாலிதீன் தொட்டிகளில் தேக்கி வைக்கிறோம். இந்த தொட்டிகள் அமைக்க அதன் பரப்பை பொருத்து குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை ஆகிறது. சொட்டு நீர்ப்பாசனம் போல், இந்த பாலிதீன் தொட்டிகள் மூலமும் நீர் சிக்கனமாவதால் இந்த தொட்டிகள் அமைக்க தோட்டக்கலைத் துறை 50 சதவீத மானியம் வழங்கினால் நலமாக இருக்கும் என்றார்.

இரட்டை லாபம்

வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், செம்மண் நிலப்பரப்பைபோல், களிமண் நிலப்பரப்பு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் இதுபோன்ற பாலிதீன் தொட்டிகள் அமைத்து நீர்ப்பாசனம் செய்யலாம். இந்த களிமண் நிலப்பரப்பு பாலிதீன் தொட்டிகளில் மீன்களை வளர்க்கலாம். இந்த தொட்டிகள் மூலம் நீரை சிக்கனப்படுத்த முடிவதுடன் மீன் வளர்ப்பு மூலம் நல்ல வருவாயும் கிடைப்பதால் விவசாயிகளுக்கு இரட்டை லாபம் கிடைக்கிறது. அதனால், தற்போது விவசாய இந்த பாலிதீன் தொட்டி நீர்ப்பாசனத்துக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளனர். இந்த தொட்டியில் 100 மைக்கிரான் முதல் 200 மைக்கிரான் அளவுள்ள பாலிதீன் ஷீட்டை பயன்படுத்தலாம். இந்த தொட்டிகளை 60 அடி நீளம், 60 அடி அகலத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x