Published : 21 Jul 2015 08:31 AM
Last Updated : 21 Jul 2015 08:31 AM

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பட்டப்படிப்பு கலந்தாய்வு தொடக்கம்: பொதுப்பிரிவில் பங்கேற்க 306 மாணவர்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பி.ஏ., எல்.எல்.பி. பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் பொதுப் பிரிவு இடங்களைப் பெற 306 மாணவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மற்றும் செங்கல்பட்டு, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் என மொத்தம் 6 சட்டக் கல்லூரிகளில் பி.ஏ., எல்.எல்.பி. பட்டப்படிப்பு உள்ளது. இவற்றில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன.

2015-16-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக மொத்தம் 5,551 விண்ணப்பங்கள் வந்திருந் தன. இதில் 5,365 விண்ணப்பங் கள் ஏற்கப்பட்டன. 186 விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. நகராட்சி நிர்வாகம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு கலந்தாய்வைத் தொடங்கிவைத்தார்.

முதல் கட்டமாக பொதுப் பிரி வுக்கென ஒதுக்கப்பட்ட 306 இடங் களுக்கான கலந்தாய்வு நடத்தப் பட்டது. இதற்காக 306 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

அப்போது சட்டத்துறை செய லர் பூவலிங்கம், சட்டக் கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் டி.வணங்காமுடி, பதிவாளர் எம்.எஸ்.சவுந்தரபாண் டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இன்று பழங்குடியினர், ஆதி திராவிடர், இதர ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்களுக்கு கலந் தாய்வு நடைபெறுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற் படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர் களுக்கு புதன்கிழமையும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வியாழக்கிழமையும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. திங்கள் கிழமை ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள், ஜூலை 27-ம் தேதிக்குள் சம்பந்தப் பட்ட கல்லூரியில் ரூ.1,205 கட்டணம் செலுத்தி சேர்ந்துவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x