Published : 21 Jul 2015 08:17 AM
Last Updated : 21 Jul 2015 08:17 AM

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது: பேரவை கூட்டுவது குறித்து ஆலோசனை

முதல்வர் ஜெயலலிதா தலைமை யில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.

முதல்வர் ஜெயலலிதா நேற்று பகல் 12.50 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். சிறிது நேரத்தில் அவரது தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 28 அமைச்சர்கள், தலைமைச் செயலர் கு.ஞானதே சிகன் ஆகியோர் பங்கேற்றனர். 5-வது முறை முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த ஆண்டுக்கான சட்டப்பேர வையின் முதல் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கி 23-ம் தேதி முடிவடைந் தது. பின்னர், மார்ச் 25-ம் தேதி பேரவையில் 2015-16ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது 4 நாட்கள் விவாதம் நடத்தப் பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி விவாதத் துக்கு முதல்வர் பன்னீர்செல்வம் பதிலளித்து பேசினார். அதன் பிறகு, மானியக் கோரிக் கைகள் தாக்கல் செய்யப் படாமல் பேரவை தேதி குறிப்பி டாமல் ஒத்திவைக்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்றதை யடுத்து, மே 23-ம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இந்நிலையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத் தில், சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும், செப்டம்பர் மாதம் தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டா ளர்கள் மாநாடு சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. இந்த மாநாடு மூலம் தமிழகத்துக்கான முதலீடுகளை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக அளவில் ஈர்ப்பது தொடர் பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x