Published : 18 Jul 2015 08:07 AM
Last Updated : 18 Jul 2015 08:07 AM

ரம்ஜான் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

புனித ரம்ஜான் திருநாளை முன் னிட்டு இஸ்லாமிய பெருமக் களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி (திமுக தலைவர்):

அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய பண்புகள் சிறக்க ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியோடும், மன எழுச்சியோடும் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையினர் நல ஆணையம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், உருது அகாடமி, காயிதே மில்லத் மணி மண்டபம், முஸ்லிம் களுக்கு 3.5 சதவீத தனி இட ஒதுக் கீடு, உமறுப்புலவர் மணி மண்டபம், உலமா மற்றும் பணியாளர் நலவாரியம் என இஸ்லாமிய மக்களின் மேம்பாட்டுக்காக திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை இந்நாளில் நினைவுகூர்கிறேன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):

பசிக் கொடுமையை உணரச் செய்து மனிதர்களை மேம்படுத்த உதவுவதே ரம்ஜான் நோன்பின் சிறப்பாகும். ‘போதுமென்ற மன தைப் பெறுவதே உண்மையான செல்வம்’ என்ற நபிகள் நாயகத்தின் நெறிகளை அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

ரம்ஜான் திருநாளைக் கொண் டாடும் இஸ்லாமியர்கள் அனை வருக்கும் வாழ்த்துகள். நபிகள் நாயகத்தின் போதனைகளில் முக்கியமானது மது அருந்தாமை. திருமறையில் உள்ள இத்தகைய அறிவுரைகளை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மனிதநேயம், நீதி, நேர்மையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் பின்பற்ற வேண்டும்.

வைகோ (மதிமுக பொதுச்செய லாளர்):

அனைத்து மதத்தினரும் இணக்கமாக வாழ்வதுதான் இந்திய ஜனநாயகத்தை காக்கும் அரணா கும். ஆனால், நாட்டின் மதச் சார்பின்மை கோட்பாட்டை தகர்க்க அதிகாரத்தில் இருப்பவர்கள் முயன்று வருவது அபாயகர மானது. மத நல்லிணக்கத்தை காக்க புனித ரம்ஜான் திருநாளில் உறுதியேற்போம்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்):

சுதந்திர இந்தியாவில் என்றும் இல்லாத அளவுக்கு வகுப்புவாத சக்திகள் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான சக்திகளை காங்கிரஸ் கட்சி வேரோடு சாய்க்கும் என இந்நாளில் உறுதி அளிக்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):

பாஜக ஆட்சியில் சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் எண் ணங்களையும், உணர்வுகளை யும் மதித்து மதநல்லிணக்கத் துக்கு எடுத்துக்காட்டாக நாம் பாடுபட வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விடு தலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர்):

இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறி, பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வைக் கற்பிக்காத ஒரு மகத்தான தத்துவமாகும். சிறுபான்மையினர், தலித், பழங்குடி யினர், பிற உழைக்கும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக எழுச்சி பெற புனித ரம்ஜான் நாளில் உறுதியேற்போம்.

எச்.வசந்தகுமார் (தமிழ்நாடு காங் கிரஸ் துணைத் தலைவர்):

இயன் றதை இல்லாதோர்க்கு வழங்கு வோம் என்ற அறமொழிக்கேற்ப எளியோர்க்கு இன்முகத்தோடு உதவி செய்யும் பெருநாளில் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்.முஹம்மது முஸ்தஃபா நூரி (தமிழக முற்போக்கு உலமா பேரவை மாநிலத் தலைவர்)

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம். அமைதியின் காதை உலகம் முழுக்க கொண்டு செல்லும் விதமாகவே இறைத்தூதர் முஹம் மது (ஸல்) அவர்கள் உலகில் தோன்றினார்கள். அவர்களின் கட் டளையை ஏற்று இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, இரவு பகல் என இறைவனை வணங்கி தங்களின் உளத் தூய் மையை உறுதி செய்த முஸ்லிம்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சு.திருநாவுக்கர சர், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல் முருகன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி, சிறுபான்மை சமூக புரட்சி இயக்க தலைவர் லியாகத் அலிகான், அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்.கே.என்.சதக்கத்துல்லா, இந் திய தேசிய முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் ஜவஹர் அலி, கொங்கு நாடு ஜனநாயக கட்சி தலைவர் ஜி.கே.நாகராஜ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மதச்சார்பாற்ற ஜனதாதளம் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஜான் மோசஸ், அகில இந்திய தேசிய லீக் தலைவர் எஸ்.ஜே.இனாயத் துல்லா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x