Published : 06 Jul 2015 10:04 AM
Last Updated : 06 Jul 2015 10:04 AM

மது அருந்தும்போது நடந்த தகராறில் இளைஞர் கொலை: சோழவரத்தில் மதுக்கடை சூறை - சாலை மறியல், தீ வைப்பால் பதற்றம்

சோழவரம் டாஸ்மாக் மது பானக் கடை அருகே இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் பாருக்கு சிலர் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருமந்தையைச் சேர்ந்தவர் முருகன் (28). கட்டுமான தொழிலுக்கு தேவையான மரப்பலகை களை வாடகைக்கு விடும் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு ஞாயிறு சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் மது அருந்திக் கொண் டிருந்தார்.

அப்போது, மதுபோதையில் இருந்த முருகனுக்கும், மர்ம நபர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், முருகன், உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் முருகனின் உறவினர்கள் நேற்று காலை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கொலைக்கு காரணமானவர் களை உடனே கைது செய்ய வேண் டும், கொலைக்கு காரணமான டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றவேண்டும் என்று வலியுறுத் தினர். சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சிலர், டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கியதோடு அதற்கு தீ வைத்தனர். சிலர், கடப்பாறையால் டாஸ்மாக் கடை யின் பூட்டை உடைக்க முயற்சித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக முருகனின் உடலை சோழவரம் போலீஸார் மீட்க முயற்சித்ததை பொதுமக்கள் சிலர் தடுத்து நிறுத்தி னர். தகவலறிந்த திருவள்ளூர் எஸ்.பி. சாம்சன், பொன்னேரி டி.எஸ்.பி. சேகர் உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். டாஸ்மாக் பூட்டை உடைக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், குற்ற வாளிகளை விரைவில் கைது செய்வதாகவும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.

இதையடுத்து, 2 மணி நேரத் துக்கு மேல் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, சோழவரம் போலீஸார், முருகனின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள சோழவரம் போலீ ஸார், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பாரின் ஊழியர்கள் உட்பட 9 பேரிடம் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்ற னர். அருமந்தை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x